ஊடக வதந்தியை ஊதி தள்ளிய நித்யா மேனன்
தளபதிக்கு ஜோடியாக அசால்டாக நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நித்தியா மேனன். இவர் நடிப்பிற்கு தனி எதிர்பார்ப்பு உள்ளது. மத்த நடிகைகளை காட்டிலும் நித்தியா மேனனின் நடிப்பு சற்று மாறுபட்டதாக இருக்கும்.

இவர் நடித்த ஓகே கண்மணி போன்ற படங்கள் வித்தியாசமானதாகவும் அறிவுப்பூர்வமாகவும் கதைக்களம் இருக்கும். மலையாளத்திலும் தமிழிலும் முன்னணி நாயகியாக வளம் வந்து கொண்டிருக்கும் நித்யா மேனன் குறித்து பல வதந்திகள் சமூக வலைதளத்தில் கடந்த சில நாட்களாக பரவி வந்தது.
மேலும் படிக்க : பெண்மை போற்றும் ஆர்ஜே பாலாஜியின் ஜேஎஃப்டபிள்யு விருது

டாப் ஹீரோயினிகளுக்கு டப் கொடுத்து வரும் நித்யா மேனன் இனி பாடத்தில் நடிக்க மாட்டார் அவர் பிரபல மலையாள நடிகர் ஒருவரை சின்சியராக காதலித்து வருகிறார் .எனவே அவர் விரைவில் திருமணம் செய்து கொள்வதாகவும் இனி திரைப்படத்தில் நடிக்க வர மாட்டார் என்றும் பல வதந்திகள் அவரைப் பற்றி வெளிவந்தது. இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நித்தியா மேனன் தனது கருத்தை பதிவிட்டு உள்ளார்.அவர் கூறியதாவது ஊடகத்தில் வரும் அனைத்து செய்திகளும் முற்றிலும் பொய். ஒருவரைப் பற்றி விமர்சனத்தை மீடியாவில் வெளியிடுவதற்கு முன் ஊடகவியலாளர்கள் அதை பற்றி நன்றாக விசாரிக்க வேண்டும்.

அது உண்மையா பொய்யா என்று செய்தியை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் அதன்பின் விமர்சனங்களை வெளியிடுங்கள் என்று பதிவிட்டுள்ளார். ஒருவரைப் பற்றிய தகவலை வெளியிடுவதற்கு முன் அவரைப் பற்றிய முழு விவரத்தையும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். வெறும் செய்தியாக மட்டும் பார்க்காமல் அது ஒருவரின் வாழ்க்கை என்று சிந்தித்து ஒருவரை பற்றி விமர்சிக்க வேண்டும்.
மேலும் படிக்க : சூர்யாவின் வாடிவாசல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்