செய்திகள்தேசியம்

தில்லாகப் பேசும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

தில்லாக பேசும் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் பிறகு இந்தியா 11 சதவீத வளர்ச்சி அடைந்தது என்பதை தெரிவித்து தமிழகம் வந்திருக்கும் நிர்மலா சீதாராமன் அவர்கள், தமிழக ஊடகங்களில் தெளிவாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பொருளாதாரம் விழிப்புணர்வுடன் பதில் கொடுத்திருக்கின்றார். தமிழகத்தைச் சேர்ந்த பெண் நிதியமைச்சர் என்பது பெருமிதம் அதைவிட அவரது ஆளுமையான பேச்சு இன்னும் பெருமிதத்தை அதிகப்படுத்துகின்றது.

பட்பட் என பதில்கள் கைவசம்

திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் பட்ஜெட் குறித்தும் நாட்டில் பிஜேபி அரசாங்கம் பொதுநலன் கருதி செயல்படுகின்றது என்பதை ஆணித்தனமாக வலியுறுத்தி தெரிவித்திருக்கின்றார். கேட்கப்பட்ட பொருளாதார கேள்விகளாக இருக்கட்டும், வங்கி சம்பந்தப்பட்ட கேள்விகளாக இருக்கட்டும், எதிர்கட்சிகள் தொடர்பான கேள்விகள் ஆக இருக்கட்டும் எல்லை சிக்கல்கள் தொடர்பான கேள்விகளாக இருக்கட்டும் ஆணித்தரமான உறுதியான பதிலை கொடுத்திருந்தார்.

கம்பீரமான போக்குடன் உடனடி பதில்கள்

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பொருளாதாரம் துறையில் படித்தவர் என்றபோதிலும் தனது நிதித் துறையை விட்டு மற்ற துறைகளில் கேள்விகள் கேட்கப்பட்ட போதும் மழுப்பாமல் கேள்வி கடைகளுக்குள் வெறுக்காமல் குரலில் உறுதி மாறாமல் இடத்திற்கு ஏற்ற ஏற்ற இறக்கம் கொடுத்து தெளிவான பதிலை கொடுத்திருந்தார்.

நம்மை திரும்பி பார்த்து சிந்திக்கச் செய்யும் பாங்கு

அவரது ஆளுமையான பதில் நம்மை யோசிக்க வைக்கின்றது. இவங்க நல்லவங்களா கெட்டவங்களா என்ற கேள்வியும் எழுகின்றது. தமிழகமெங்கும் பிஜேபிக்கு எதிராக குரல் என்பது அதிகரித்து தான் காணப்படுகின்றன இருப்பினும் பிஜேபியின் பார்வை என்னமோ தமிழகத்தின் மீது அழுத்தமாக இருக்கின்றது அதற்கு நாம் பிஜேபியில் தமிழகத்தில் செய்திருக்கின்ற அரசியல் மாற்றங்களை நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தக்க தகவலைப் பதில்

ஊழலற்ற அரசு தனது அரசு என்று பெருமிதத்துடன் பிஜேபியை கட்சியின் ஆட்சியை நிர்மலா சீதாராமன் அவர்கள் உறுதிபட தெரிவிக்கின்றார். அத்துடன் விவசாய பிரச்சனையை அரசு பொறுமையாக கையாள தவறி விட்டதா என்று கேள்வி கேட்கப்பட்டபோது அரசு குடியரசு தினத்தன்று போராட்டம் நடத்தவும் ஊரணி செல்லவும் அனுமதி கொடுத்து இருந்தோம்.

விவசாயிகளில் ஒருவராகத் வந்த சிலர் நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்காமல் செங்கோட்டையில் தேசியக்கொடியை வீசியெறிந்த சம்பவத்திற்கு இன்னும் இந்த அரசாங்கம் பொறுமையாக விவசாயிகளை பேசி வருகின்றது மேலும் பொறுமையாக இருக்கும் என்று தனது தரப்பு வாதத்தை தெளிவாக பேசி இருக்கின்றார் இது பிஜேபியின் ஆளுமையை இந்த ஒரு விடையை கொண்டு நாம் ஆராயலாம்.

எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் அதற்கு அடிப்படையாக பொதுமக்கள் நலன் என்பது அவசியமாக இருக்கின்றது அதை இந்த பிஜேபி அரசாங்கம் முழுமையாக ஏற்று செயல்படுகின்றது என்பதை அவருடைய பல பதில்கள் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன விவசாயிகளுக்கு புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள மூன்று சட்டங்கள்தான் பிரச்சனை. எனில் அவர்களுடன் இதுவரை பேசியும் இருக்கின்றோம் இனியும் பேசுவோம் என்று தெளிவுபட தெரிவித்திருக்கின்றார். இது பிஜேபி அரசின் வெளிப்படைத் தன்மையை காட்டுகின்றது என்று எண்ணத் தோன்றுகின்றது இந்த கருத்திற்கு பதில் கருத்து பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் நாம் பொறுத்திருந்து வரும் தேர்தலுக்கு பின்பு தான் விடை தெரிந்துகொள்ள முடியும்.

மேலும் பழைய மண்டி கொள்கைகள் மாற்றப்படாத புதிய சட்டங்கள் உதவும் என்றும் நிர்மலா சீதாராமன் அவர்கள் தனது பதிலில் தெரிவித்திருந்தார். இத்துடன் இந்தியா சீனா எல்லை நிலவரங்களையும் தேசப்பற்றுடன் உணர்ச்சியை கட்டுக்குள் வைத்து தேவைப்படும் கருத்துக்களை பூசி முழுகாமல் நிதானமாகப் பேசினார் இதையும் நாம் கணக்கில் வைத்துக்கொண்டு ஆராய்ந்து செயல்பட வேண்டும். ஊடகத்தினர் கள் தங்களது அனுபவம் மற்றும் புத்திக்கூர்மை தமிழக அரசியல் பார்வை தேசிய போக்கு ஆகியவற்றை வைத்து கேட்கப்பட்ட கேள்விகளை கையாளும் விதம் என்பது ஒரு சிறந்த ஆளுமை தன்மை ஆகவே தெரிகின்றது இருப்பினும் இதுகுறித்து பொதுமக்களுக்கு ஒரு பார்வை இருக்கும் அதை அவர்கள் கையில் விட்டுவிட வேண்டும் பார்ப்போம் மக்கள் இந்த விடைகளை வைத்து திருப்தி கொள்கிறார்களா என்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *