ஒன்பது மாத மகபேருகால விடுமுறையுடன் முழு சம்பளம் அறிவிப்பு!
தமிழக அரசின் புதிய அறிக்கையாக கர்ப்பிணி பெண்களுக்கு ஒன்பது மாதம் பேறுகால விடுமுறையானது மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்கி இருக்கின்றது. தமிழக அரசின் திருமணமான பெண் ஊழியருக்கு 9 மாதங்கள் பேறுகால விடுப்பு கொடுப்பது தொடர்பாக அரசு திருத்தம் செய்து இருக்கின்றது குறிப்பிடத்தக்கதாகும். பணியாளர் நிர்வாக சீர்திருத்தம் துறையானது வெளியிட்ட அறிக்கையில் தமிழக அரசு பெண் ஊழியர்கள் ஆசிரியைகள் ஆகியோருக்கு பேறுகால விடுப்பு ஆறு மாதங்கள் இதுவரை கொடுக்கப்பட்டு வந்தது.
தற்போது 9 மாதங்களாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்குக் கர்ப்ப காலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அழுகையானது தமிழக அரசின் பணியாளர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்த ஒன்பது மாத விடுப்பு தமிழக அரசு துறையில் தற்காலிக நிலையில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. பெண்கள் பேறுகாலத்தில் 270 நாட்கள் அதாவது 9 மாதம் வீட்டிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
மகளிருக்கு பேறுகால காலகட்டத்தில் விடுப்புடன் முழு சம்பளமும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்தச் சலுகையைப் பெற அரசு துறையில் பணியாற்றும் பெண்கள் குறைந்தபட்சம் ஓராண்டு பணியை நிறைவு செய்தவர்கள் இந்தச் சலுகையைப் பெற தகுதியுடையவர்கள் ஆகின்றனர்.
மேலும் இரண்டு குழந்தைகளுக்குக் குறைவாக இருக்கும் பெண்கள் முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தை பெற்ற பெண்கள் இந்தச் சலுகை கொடுக்கப்பட்டிருக்கிறது அதேநேரத்தில் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கும் பெண்களுக்கு இந்தச் சலுகை கிடையாது என்று தமிழக பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தத்துறை செயலர் ஸ்வர்ணா அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழக அரசு அறிவித்து மகளிர்க்கான இந்த அறிவிப்பானது மகிழ்ச்சையை பெண்களுக்குக் கொடுத்துள்ளது. இவ்வாறே தற்பொழுது தனியார் நிறுவனங்களும் ஆறுமாத விடுமுறையுடன் சம்பளத் தொகையானது கொடுக்கப்படுகின்றது என்பது முக்கியமானது ஆகும். இது தற்பொழுது தமிழக அரசுத் திருத்தங்களை உருவாக்கி ஆணையை அறிவித்துள்ளது. அரசு பணியாற்றும் பெண்களுக்குச் சில சலுகைகளை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.