செய்திகள்

இரவு நேர ஊரடங்கு ரத்து.. தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

கொரோனா தொற்று காரணமாக இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அமல்படுத்தப்பட்ட இரவு ஊரடங்கு நாளை (ஜன.28) முதல் விலக்கிக் கொள்ளப்படுகிறது என்றும், வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.30) முழு ஊரடங்கு கிடையாது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் எதெற்கெல்லாம் அனுமதி..? எதெற்கெல்லாம் அனுமதி இல்லை என்பதை பார்க்கலாம்..

1-நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பிப்.1ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் 1-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும்

2-மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்படவும் பொருட்காட்சிகள் நடத்தவும் அனுமதி இல்லை.

3-அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் அனைத்து கலை விழாக்களுக்கும் அனுமதி மறுப்பு

4-அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் அனைத்து கலை விழாக்களுக்கும் அனுமதி மறுப்பு

5-துணிக்கடைகள் மற்றும் நகைக் கடைகளில் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி

6-திருமணம் சார்ந்த நிகழ்வுகளுக்கு 100 பேரும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு 50 பேரும் அனுமதி

7-அனைத்து திரையரங்குகளிலும் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாடு தொடரும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *