NHIPMPL job opportunity 2023: டிகிரி முடித்திருந்தால் போதும் மாதம் ரூ.75,000 சம்பளம் NHIPMPL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆனது NHIPMPL நிறுவனத்தில் Assistant Adminstrative Officer பணிக்கான காலி பணியிடங்களை நிரப்ப உள்ளதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. தகுதி உள்ள மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பை தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த காலிப்பணியிடத்திற்கு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய கடைசி நாள் 14.11.2023 ஆகும்.
காலிப்பணியிடங்கள்
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆனது NHIPMPL நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Adminstrative Officer பதவிக்காக காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட முன்னதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது இந்த பணிக்கு 02 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கல்வித் தகுதி
இப்படிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு
இப்படிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 14.11.2023 இன் படி 35 வயதிற்கு கீழ் உள்ளவராக இருக்க வேண்டும். மேல்குறிப்பிட்ட வயதுக்குள் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே வரவேற்கப்படுகின்றன.
சம்பளம்
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.75,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் NHIPMPL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உங்களது விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை விண்ணப்பிக்க கடைசி தேதியான 14.11.2023 தேதிக்குள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து hr.nhipmpl@nhai.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அதிகாரப்பூர்வ இணையதளம்
Download Notification and Application link
மின்னஞ்சல் முகவரி
hr.nhipmpl@nhai.org