NHAI வேலைவாய்ப்பு 2020
இந்திய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு. NHAI என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய நெடுஞ்சாலை ஆணையத்தில் 31 பணியிடங்கள் நிரப்புவதற்கான விளம்பரம் இதோ.
ஒரு அரசு துறையில் இருந்து மற்றொரு அரசுத் துறைக்கு மாற ஆவலாக உள்ளீர்களா! உங்களுக்கான விளம்பரம் இது.
மற்ற துறையினருக்கும் நெடுஞ்சாலைத் துறையில் வேறு பதவிகளில் இருப்பவர்களும் இந்த வேலை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
நிர்வாகப் பிரிவில் பொது மேலாளர், தலைமை பொது மேலாளர், மேலாளர், உதவி மேலாளர் நான்கு பதவிகளுக்கு வெவ்வேறு காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியிடங்கள்
பொது மேலாளர்- 3
தலைமை பொது மேலாளர்- 8
மேலாளர்- 8
உதவி மேலாளர்- 3
கல்வி தகுதி மற்றும் அனுபவம்
அரசு அங்கீகரித்த கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமான படிப்பை முடித்திருக்க வேண்டும். மூன்று ஆண்டுகள் முதல் 14 ஆண்டுகள் வரை பணி அனுபவத்திற்கு தேர்ந்தவாறு அந்தந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும். பதவிக்கு ஏற்றவாறு கல்வித் தகுதியும் அனுபவமும் தேவை. அதன் விரிவான தகவல்களைப் பெற அதிகாரப்பூர்வமான தளத்தில் தெரிந்து கொள்ளவும்.
வயது வரம்பு
இந்தப் பதவிக்களுக்கு அனுபவம் மிக்கவர்களே விண்ணப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் இருப்பதால் குறைந்த பட்ச வயது வரம்பை கூறாமல் அதிகபட்சமாக 56 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என்ற நிபந்தனை மட்டும் விடுத்துள்ளனர்.
தேர்வு முறை
பிரதிநிதித்துவம் மற்றும் பதவி உயர்வு மூலமாக பணியிடங்கள் நிரப்பப்படும்.
சம்பள வடிவம்
பதவிக்கு தகுந்தவாறு சம்பள வடிவம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க
அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கியமான தேதிகள்
தொடக்க தேதிகள்: 29-07-2020 (10:00 A.M.)
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 28-08-2020 (6:00 P.M.)
இணையதளத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அச்செடுத்து குறிப்பிட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான கடைசி தேதி: 14-09-2020 (6:00 P.M.)
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வமான இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்