அடுத்தடுத்து சோதனை…!அமெரிக்காவை நடுங்க வைக்கும் தென்கொரியா..!
ரஷ்யா-உக்ரைன் இடையே ராணுவ நடவடிக்கை தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்காவுக்கு அதிர்சி வைத்தியம் அளிக்கும் வகையில் தென்கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை நேரடியாக அமெரிக்காவையே தாக்கும் வகையில் உள்ளதாகவும், தென்கொரியா ஐநா விதிகளை மீறுவதாக அமெரிக்காவின் பெண்டகன் தெரிவித்துள்ளது.
இதனால் வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் மீண்டும் தொடங்கியுள்ளது. நாங்கள் அணுசக்தி திறன்களை ஓரளவு நிறுத்தி வைப்பதற்கு பதிலாக, எங்கள் மீதான பொருளாதார தடைகளை படிப்படியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவிடம் வடகொரியா கடந்த பேச்சுவார்த்தையின்போது கூறியது.
ஆனால் அமெரிக்கா அதை செவிகொடுத்து கேட்காததால் புத்தாண்டு முதல் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிதவிக்கும் வடகொரியா அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை செய்து மேற்குலக நாடுகளுக்கு பயத்தை காட்டி வருகிறது தென்கொரியா. . அதன்படி ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்கிற ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை நடத்தியதை தொடர்ந்து வட கொரிய அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது.
அதுமட்டுல்லாது, வட கொரியா 2 பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை ஏவி, கடலில் செலுத்தியதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்தது. அதாவது, வடகொரியா குறுகிய தொலைவு ஏவுகணைகள் இரண்டை 5 நிமிட இடைவெளியில் கடற்கரை நகரமான ஹாம்ஹங்கில் இருந்து ஏவியதாகவும், அவை 190 கி.மீ. தொலைவுக்கு பறந்ததாகவும் பின்னர் அவைகடலில் விழுந்ததாகவும் கொரியாவின் கூட்டுப்படை தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.