சூர்யாவின் அடுத்த படத்தில் என்னமோ எதுவோ
‘சொடக்கு மேல சொடக்கு போடுது என் வெரலு வந்து நடு தெருவில் நின்னு’
சொடக்கு போட்டு கிட்டே கொரோனா வெட்டுக்கிளி அப்படின்னு பல கொண்டு வந்துட்டீங்க அடுத்து என்ன வரப் போகுது அண்ணாத்த!!!
சமீப காலத்தில் சூர்யாவின் படங்களை பற்றிப் பேசாதவர்கள் எவரும் உண்டோன்னு இருக்கு ஏன்னா அவர் நடத்திப் படத்தில் இருந்து தான் வெட்டுக்கிளி, கொரனா சிம்டம்ஸ் எல்லாம் வெளிவந்திருக்கு . அதான் அடுத்து என்னவோ என ஆவல் மக்களுக்கு அதிகரிக்கின்றது.
7-ஆம் அறிவு காப்பான் அந்தப் பட்டியலில் முதல் பரிசை பெற்று பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது…
அண்ணியார் (ஜோ) ஒருபுறம் திரை உலகை ஆட்டி வைக்க அண்ணன் (சூர்யா) ஒருபுறம் மாற்றங்களைக் கொண்டு வருகிறார்.
சூர்யாவின் சூரரைப் போற்று படம் பல எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறது. சமீபத்தில் அது சென்சார் போட்டிருக்கு சென்று யூ சர்டிபிகேட் வாங்கியதாக ஒரு செய்தி வெளியானது. ஊரடங்கு விடுபட்டு திரையரங்குகள் திறக்கப்பட்ட உடன் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா ஏற்றுக்கொண்ட படங்கள் சில படப்பிடிப்பின் மத்தியில் கொரோனாவால் நிறுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இயக்குனர் ஹரி அவர்களின் படமான அருவா அதில் குறிப்பிடத்தக்கது. வேல் படத்திற்கு பிறகு சூர்யாவின் இரட்டை வேட நடிப்பில் அருவா படம் ரசிகர்களுக்கு இரட்டை சந்தோஷத்தை தரப்போகிறது. அருவா படத்தில் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் அண்ணன் தம்பி கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்கிறார்.
கொரோனா ஊரடங்கு முன்பே இப்படம் பற்றிய தகவல்களும் செய்திகளும் வெளியான நிலையில் படப்பிடிப்பு தொடங்கி தற்போது அனுமதி இல்லாத நிலையில் இருப்பதால் ஊரடங்கு நிறைவடைந்த பின் சூர்யா முதலில் அருவா படத்தில் நடிப்பார்.
அசுரன் படத்தின் இயக்குனரான வெற்றிமாறனுடன் இணைகிறார் சூர்யா. வாடிவாசல் எனும் படம் நடிக்க இருக்கிறார் என்பது ரசிகர்களிடையே அடுத்த எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது. அருவாவிற்கு பிறகு பட்டியலில் இருப்பது வாடிவாசல். வெற்றிமாறன் இயக்கி ஜி.வி.பிரகாஷ் இசைத்துச் சூரியா அதில் நடித்து வாடிவாசல் தயாராகப் போகிறது. ஜல்லிக்கட்டு காளைகளான ரசிகர்கள் அதற்காக காத்துள்ளனர்.
டைம் டிராவலர் மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமான 24 பல விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலில் சளைக்கவில்லை. இப்படத்தை இயக்கியவர் விக்ரம் குமார்.
சூர்யா ஒருபுறம் பிசியான ஷெட்யூலில் இருக்க; விக்ரம் குமார் தெலுங்கு திரையுலகில் பட்டையை கிளப்பி வந்துள்ளார். தமிழில் 2016, 24 படத்தை கொடுத்த விக்ரம் குமார் தமிழ் திரை உலகில் பயணத்தைத் தொடராமல் தெலுங்கிற்கு சென்று 2017 ஹலோ என்ற படமும் 2019 கேங் லீடர் என்ற படமும் தந்துள்ளார். இதனிடையே சூர்யா அவரைப் பார்க்கும் போதெல்லாம் எப்பொழுது மீண்டும் இணையலாம் என கேட்க; அவரும் ஒரு கதை சொல்ல அதை பிடித்துப்போன சூர்யாவும் ஓகே சொல்லியுள்ளார்.
அருவா வாடிவாசல் முடிந்த பின்னே விக்ரம் குமாருடன் படம். 2021 இப்படத்திற்கான வேலைகள் தொடங்கும் என சமீபத்தில் ஒரு பேட்டியில் விக்ரம் குமார் கூறியுள்ளார்.
என்ன அவதாரத்தில் வரப்போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்…