எடைக்குறைப்பு கதாநாயகிகளின் பட்டியலில் அடுத்தது ஹன்சிகா
ஹன்சிகா மோட்வானி எடை குறைத்துள்ளார்.
என்ன எல்லாரும் வீட்ல இருக்கறதுனால உடலைக் குறைக்கிறாங்களா! நம்ம மக்கள் வீட்டில் இருந்தா உடலை ஏத்து வாங்க இவங்க எல்லாம் என்னன்னா உடலை குறைக்கிறாங்க.
ஹன்சிகா மோட்வானி திரையுலகத்திற்கு வந்த பிறகு குஷ்புவின் தங்கையோ (அ) சொந்தக்காரரோ என்று பார்ப்பவர்கள் அனைவரின் நினைப்புகளிலும் குடியேறினார். மாப்பிள்ளை படத்தில் அறிமுகமாகி பல முன்னணி கதாநாயகர்களுடன் பப்ளியாக நடித்தவர்.
ரோமியோ ஜூலியட்
தனுஷ், விஷால், சித்தார்த், ஆர்யா, ஜெயம் ரவி, சூர்யா, சிம்பு என பலருடன் பல படங்கள் நடிக்கையில் தற்போது மகா, பார்ட்னர் என இரு படங்கள் பட்டியலில் உள்ளது. சிம்புவுடன் நடித்த வாலு படத்தின் போது இவ்விருவர் இடையே காதல் கிசுகிசுப்பு வர அதற்குப்பின் அவர்களுக்குள் மோதல் வர இருவரும் பிரிந்தனர்.
ஹன்சிகா அதன்பிறகு சிறிது காலம் ஓய்வெடுத்துக் கொண்டு பின்பு மாஸாக திரையுலகுக்கு திரும்பினார். ரோமியோ ஜூலியட் போகன் போன்ற படங்கள் ஜெயம் ரவி ஹன்சிகா காம்பினேஷன் தொடர்ந்து ஹிட்டடித்தது.
சமூக ஊடகங்களில் ஹன்சிகா
சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஹன்சிகா மோட்வானிக்கு பிரபல தொழிலதிபருடன் திருமணம் என்ற வதந்தியும் பரவியது. அந்த வதந்தியை நம்பி பாவம் பலர் ஏமாந்தனர்.
ஜூனியர் குஷ்புவாக கருதப்படும் ஹன்சிகா மோட்வானி எடை குறைத்துள்ளார் என்ற செய்தி பலர் ரசிகர்களுக்கு அச்சச்சோ என்ற பீலிங் கொடுத்துள்ளது. ஹன்சிகா மோட்வானி எடை குறைத்த பிறகு தற்போது சமூக வலைத்தளங்களில் தன்னுடைய புகைப்படங்களை பதிவிட அனைத்து ரசிகர்கர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இன்ஸ்டாகிராமில் ஹன்சிகா மோட்வானி
சுட சுட வந்த போட்டோக்களில் சூடான அழகியாக காட்சியளிக்கும் ஹன்சிகா மோட்வானி ரசித்தாலும் ரசிகர்கள் ஷப்பி ஹன்சிகாவை மிஸ் பண்ணுகின்றனர். இன்ஸ்டாகிராமில் ஹன்சிகா மோட்வானி ஒல்லி பெல்லி உடலில் நைட் ட்ரஸ் உடுத்திக்கொண்டு எடுத்த புகைப்படம் வைரலாகி வந்து கொண்டிருக்கிறது.
நம்மள தவர எல்லாருக்கும் உடல் எடை குறையது அப்படின்னு நீங்க வருத்தப்படுவது எனக்கு கேக்குது. நல்ல ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு நல்லா தெம்பா உடற்பயிற்சி செஞ்சு வாழ்க்கை முறையை சீராக வெச்சுக்கோங்க மக்களே.