சினிமாசின்னத்திரைசெய்திகள்தமிழகம்யூடியூபெர்ஸ்

எதிர்நீச்சலில் அடுத்த ஆதிகுணசேகரன் இவர் தான்; வந்துட்டாருயா வந்துட்டாரு

சன் டிவியில் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலை பார்க்காத ஆட்களே இருக்க முடியாது. குறிப்பாக அதில் வரும் ஆதி குணசேகரன் கேரக்டருக்காக சீரியல் பார்ப்பவர்களே ஏராளம். எதிர்நீச்சல் சீரியல் மற்ற நாடகங்களை போல் இல்லாமல் மிகவும் மாறுபட்டதாக இருக்கும்.

நகைச்சுவையும் வில்லத்தனமும் ஒரே நேரத்தில் பார்க்கும் ஒரு நாடகமாக இருப்பதால்தான் இதனை அனைவரும் விடாமல் தொடர்ந்து பார்த்து வருகின்றனர். அதிலும் ஆதி குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்துவின் நடிப்புக்கு அனைத்து ரசிகர்களும் அடிமைதான் அவரின் நடிப்பே ஒரு தனி விதமாக இருக்கும்.

இப்படி சுவாரசியமாக ஓடிக்கொண்டிருந்த சீரியலில் எதிர்பாராத விதமாக பல துக்கங்கள் நடந்து விட்டது அதை அனைவரும் அறிந்ததே நம் அனைவரின் உள்ளத்தை கவர்ந்த மாரிமுத்து அவர்கள் ஒரு சில மாதத்திற்கு முன் திடீரென நம்மை விட்டு பிரிந்து நம்மை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தி விட்டு சென்று விட்டார்.

மாரிமுத்துவின் மறைவிற்குப் பின் அடுத்து யார் வந்தாலும் அவருக்கு நிகராக முடியாது சீரியல் பார்ப்பதே அவருக்காக தான் அவரே இல்லாத போது இந்த சீரியல் எதற்கு என்று அனைத்து ரசிகர்களும் கொந்தளித்து வந்தனர். இந்நிலையில் அவர் இறப்பிற்கு பின் சில நாட்களாக ஆதி குணசேகரன் வெளியூருக்கு சென்று விட்டது போல காட்டிக்கொண்டு வந்தனர்.

மேலும் படிக்க : ஆதிகுணசேகரனுக்கு ஆப்பு வைக்கும் அப்பத்தா எதிர்நீச்சல்

இந்நிலையில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்திற்கு மாரிமுத்துவிற்கு பதிலாக வேறு ஒருவரை மாற்ற போவதாக மாரிமுத்துவிற்கு நீங்கள் யாரும் இல்லை என்றாலும் கூட ஆனால் யாராவது ஒருவர் வந்து தானே தேட வேண்டும் என்பதில் அவருக்கு பதில் யாரை போடுவது என்று குழப்பம் இருந்தது. ஆதி குணசேகரனாக பசுபதி, வேல ராமமூர்த்தி இவர்களில் யாராவது ஒருவர் என்று கூறினர் .

ஆதிகுணசேகரன் ஆக யார் வருவார் என்ற ஆவல் அனைவரும் மத்தியிலும் தீயாய் எரிந்தது. இப்படி பரபரப்புடன் எதிர்பார்த்து காத்திருந்த ஆதி குணசேகரன் வந்துவிட்டார் அவர் வீட்டிற்கு கெத்தாக ஜீப்பில் வந்து இறங்குவது போல promo வெளியாகி உள்ளது. ஆனால் இன்னும் யார் அந்த ஆதிகுணசேகரன் என்பதை காட்டாமல் சஸ்பென்ஸ் ஆக வைத்து உள்ளனர்.புரோமோ பார்த்து கண்டிப்பாக இவராக தான் இருக்கும் அவராகத்தான் இருக்கும் என்று மாறி மாறி அனைவரும் தங்களது கருத்தை கூறி வருகின்றனர் ஆதி குணசேகரன் யாராக இருக்கும் என்பதை இனி வரப்போகும் எபிசோடுகளை பார்த்து தெரிந்து கொள்வோம் ஆனால் அதிக எதிர்பார்ப்பாக வேல ராமமூர்த்தி தான் ஆதி குணசேகரன் என்று அனைவரும் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க : குதுகலமாய் தொடரும் குக்குவித் கோமாளி புரோமோ!..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *