சீனாவை விட்டு வெளியேறும் லிங்கிடின்
தனிக்காட்டு அரசு நடத்தும் சீனாவை விட்டு லிங்கிடின் விரைவில் வெளியேற உள்ளது. சீனாவில் வேலைவாய்ப்பு சம்பந்தமாக தகவல்களை பகிரும் மைக்ரோசாஃப்டின் லிங்கிடின் நிறுவனம் 2014 ஆம் ஆண்டு முதல் சேவை செய்து வந்தது. சீன அரசின் கிடுக்குப்பிடி நெருக்கடியால் போதுமடா சாமி ஆள விடுங்கடா என்று சீனாவை விட்டு வெளியேற மைக்ரோசாஃப்ட் நடத்தும் லிங்கிடின் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சீன அரசு விரிக்கும் கெடுபிடிகள்தான் இந்த முக்கிய முடிவுக்கு காரணமாக சொல்லப்படுகின்றது. சீனா தொடர்ந்து தனது கட்டுப்பாடுகளை விதைத்து வருவதால் அது சீன மக்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் என்பதை விரைவில் அதற்கான கூலியை செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. ஏற்கனவே நமது கூகுள் தாய் சீனாவை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது. தற்போது லிங்கிடினும் அந்த லிஸ்டில் சேர்ந்துவிட்டது. சீனாவின் டிராகன் சிலிர்த்துக் கொண்டு தான் இருக்கின்றது. பார்ப்போம் என்னதான் நடக்கும் நடக்கட்டுமே.