அறிமுகமான Apple iPhone SE 2022 ..!விலை எவ்வளவு..?
ஆப்பிள் நிறுவனம் அதன் மேம்படுத்தப்பட்ட புது ஐபோன் Apple iPhone SE 2022 நேற்று அறிமுகம் செய்துள்ளது. ஆப்பிள் மிகவும் மலிவான ஸ்மோர்ட் போனான iPhone SE 2020 போன்ற வடிவில் இது வெளியிடப்பட்டாலும். அதை காட்டிலும் இதில் பல புதிய அப்டேட்டுகளை செய்துள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
iPhone SE 2022 சிறப்பு அம்சங்கள்:-
iPhone SE 2022 ஆனது 1334 x 750 தெளிவான 4.7 இன்ச் அளவிலான ஸ்கிரீன் உள்ளது. மறுபுறம், iPhone 13 ஆனது 2532 x 1170 தீர்மானம் கொண்ட 6.06 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. மேலும், மெமரியை பொறுத்தவரை, iPhone 13 மற்றும் iPhone SE 2022 இன் அடிப்படை மாறுபாடு முறையே 128GB மற்றும் 64GB மெமரி பவருடன் உள்ளது. iPhone SE 2022 ஆனது IP67 வாட்டர் ப்ரூப் கொண்டவை,
விலை விபரம்:-
iPhone SE இந்தியாவில் ரூ. 43900 முதல் கிடைக்கும். இதற்கு மாறாக, iPhone 13 சில ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனைக் கடைகளில் சுமார் ரூ.71,990க்கு விற்கப்படுகிறது.