புத்தாண்டு கொண்டாட்டமா? தடை விதித்த காவல்துறை
2020ஆம் ஆண்டு கால் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே பல போராட்டங்களை உலக மக்கள் முழுவதும் சந்தித்துள்ளனர். 2020ஆம் ஆண்டு பல போராட்டங்களுக்கு பிறகு இன்றுடன் முடிவடைகிறது. நாளை 2021 ஆம் ஆண்டு தொடங்க உள்ள நிலையில் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது காவல்துறை.
- 2021 ஆம் ஆண்டு தொடங்க உள்ள நிலையில் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது காவல்துறை.
- மக்கள் ஒன்று கூட பொது இடங்களிள் தடை.
- உணவகங்கள் 10 மணிக்கு மேல் செயல்பட அனுமதி இல்லை.
கேளிக்கை நிகழ்ச்சி
ஆண்டுதோறும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கேளிக்கை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடத்தப்படும். இந்நிகழ்ச்சிக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தனர். கொரோனா காரணமாக மக்கள் ஒன்று கூட பொது இடங்களிள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்களை தடுக்க
மெரினா உள்ளிட்ட கடற்கரை சாலைகள் இன்று இரவு 10 மணிக்கு மேல் செயல்படக் கூடாது. விபத்துக்களை தடுக்கும் நோக்கமாக சென்னையிலுள்ள மேம்பாலங்கள் இன்று இரவு மூடப்படும். உணவகங்கள் 10 மணிக்கு மேல் செயல்பட அனுமதி இல்லை.
தீவிரமாக கண்காணிக்க
சோதனைச் சாவடிகள் சென்னையில் அமைத்து தீவிரமாக கண்காணிக்க பட உள்ளன. சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி மதுபான பார்கள் இரவு 10 மணிக்கு மேல் செயல்படக் கூடாது என காவல்துறை உத்தரவிட்டுள்ளனர்.