திருமண நிகழ்ச்சியில் மொய் வசூலிக்க புதிய முயற்சி
கொரோனா காலகட்டத்தில் புதிய முயற்சிகளில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கு மொய் வசூலை டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுவாக மொய் செய்யும் வழக்கம் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் காதுகுத்து முதல் கல்யாணம் வரை எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளுக்கும் மொய் வைக்கப்படுகிறது. சுப நிகழ்ச்சி நடைபெறும் இல்லத்திலோ அல்லது மண்டபத்திலோ நுழைவு வாயிலில் மொய் எழுதுவார்கள் இதற்கென நோட்டு வைக்கப்பட்டிருக்கும்.
சுப நிகழ்ச்சியை நடத்துபவர்களின் உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகை தந்து மணமக்களை வாழ்த்தி நகை, பரிசுப் பொருட்கள் மற்றும் பணத்தை மொய்யாக வைப்பது வழக்கம். இன்றைய காலங்களில் மொய் எழுதுவது குறைந்து வருகின்றன. ஐடியில் பணிபுரியும் புதுமண தம்பதியினர் மதுரையில் திருமணம் நடைபெற்ற இவர்கள் டிஜிட்டல் முறையில் மொய் வழங்கும் முயற்சியை எடுத்துள்ளனர்.
மேலும் கூகுள் பே, போன் பே, மொபைல் ஸ்கேன் மூலம் ஆன்லைனில் க்யூஆர் கோடுகளுடன் கூடிய பத்திரிக்கையை மொய் எழுதும் பகுதியில் டிஜிட்டல் முறையில் செலுத்தி செல்வதற்காக வைத்துள்ளனர். கூகுள் பே மூலமாக மொய் தொகையை செலுத்தி சென்றார்கள். மொய் செய்ய புதிய முயற்சி எடுத்துள்ள மணமக்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டி உள்ளனர்.