வருகிறது கூகுளின் குட்டிப்பிள்ளை ஆண்ட்ராய்ட் 11 பீட்டா வெர்ஷன்.
ஆண்ட்ராய்டு என்பது கூகுள் நிறுவனம் உருவாக்கிய மொபைல் போன்களுக்கான செயலி இதை அறியாதவர்கள் என்று யாரும் இருக்கவே மாட்டார்கள். அதன் அடுத்த குட்டிப்பிள்ளை பாருங்கள்
இந்த செயலி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்த மொபைல் போன்களை இத்தனை பேர் அதுவும் இவ்வளவு எளிதாக பயன்படுத்தி இருக்க முடியுமா என்றால் அதுவும் ஒரு மிகப்பெரிய கேள்விக்குறி தான்.
நாம் பயன்படுத்தும் மொபைல் போன்களில் 95% பேர் இந்த ஆண்ட்ராய்ட் சாஃப்ட்வேர் தான் பயன்படுத்துகிறார்கள்.
இந்த ஆண்ட்ராய்ட் என்பதே பயன்படுத்துவதற்கு மிகவும் எளிது.
ஆப்பிள் நிறுவனம் அந்த மொபைல்களுக்கு தனியாக ஐஓஎஸ் என்கின்ற மென்பொருளை வைத்திருக்கிறது. ஆரம்பகட்டத்தில் நோக்கியா போன்களும் மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் மென்பொருளை பயன்படுத்தி வந்தது பிறகு அதில் ஏற்பட்ட சிக்கலால் தான் நோக்கியா நிறுவனம் மூடப்பட்டு பிறகு மீண்டும் திறக்கப்பட்டு இருக்கிறது.
இப்போது தெளிவடைந்த நோக்கியா நிறுவனமும் ஆண்ட்ராய்டின் வழிக்கே வந்துவிட்டது.
இந்த ஆன்ட்ராய்டுகள் பலவகையான அப்டேட்கள் கொடுத்துக்கொண்டே இருந்தது இப்போது வரை நாம் 10 அல்லது அதற்கு குறைவான அண்ட்ராய்டு வெர்ஷன் தான் க பயன்படுத்தி வருகிறோம்.
கூகுளின் குட்டிப்பிள்ளையின் சிறப்புகள்:
இப்போது புதிதாக வந்துள்ள இந்த ஆண்ட்ராய்ட் 11 பீட வரிகளில் என்ன அப்படி வசதிகள் உள்ளது?
பாதுகாப்பு எந்த கருவியாக இருந்தாலும் இது மிக அவசியம் ஏனென்றால் இன்றைய நவீன காலகட்டத்தில் நமக்கு தெரியாமலே நமது தகவல்களை ரகசியமாக திருடுபவர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அவற்றை கட்டுப்படுத்த இந்த 11 பீட்டா வெர்ஷன் இல் சிறந்த உள்கட்டுமான வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறதாம்.
அதுமட்டுமல்லாமல் நாம் ஒரு பாடலை கேட்கும் போது அந்த பாடலை மாற்ற வேண்டும், மாற்ற அல்லது நிறுத்த வேண்டும் என்று முடிவு செய்தால் அதற்கான பிரத்யேக ஆப்பு களுக்குள் செல்ல வேண்டிய அவசியம் இல்லை இதில் பக்கவாட்டில் ஒரு வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது அதை நாம் பயன்படுத்திய இந்தப்பாடல் வசதிகளை செய்து கொள்ளலாம்.
அதுமட்டுமல்லாமல் இந்த ஆன்ட்ராய்ட் புதிய வெர்ஷனில் நமக்கு வரும் தகவல்களை செய்திகளை குறுந்தகடுகளை தரம் பிரித்து பார்க்க முடியுமாம்.
இன்றைய காலகட்டத்தில் புஷ் நோடிஃபிகேஷன் எக்கச்சக்கமாக வந்து கொண்டு தான் இருக்கிறது அதில் என்ற தகவல் நமக்கு பிரத்யேகமாக வருகிறது என்று கண்டுபிடிப்பது சற்று சவால் ஆனால் இந்த வெர்ஷன் அண்ட்ராய்டு மென்பொருளில் அதற்கான ஒரு புதிய பிரத்யேக வசதிகள் செய்திருக்கிறார்களாம்.
ஆனால் இந்த அப்டேட் ஆன 11 இன்னும் முழுவதுமாக சந்தைக்கு வரவில்லை.
இப்போதைக்கு பீட்டா வெர்ஷன் மட்டுமே அதுவும் பிரி ரிலீஸ் வெர்ஷன் தான் கிடைக்கிறது.
இதை நாம் தரவிறக்கம் செய்து கொள்வது அந்த அளவுக்கு பாதுகாப்பு கிடையாது.
இந்த பொது ஊரடங்கு காரணத்தால் எப்போது வரவேண்டும் என்று அப்டேட் மிக தாமதமாக வந்து இருந்தாலும் ஆண்ட்ராய்டு பயன்பாட்டாளர்கள் அதை பெரிதாக ஒன்றும் வரவேற்பதாக தெரியவில்லை ஏனென்றால் ஆண்ட்ராய்ட் பயன்பாட்டாளர்கள் பல கேமரா சார்ந்த உதவிகளை எதிர்பார்த்தார்கள் அதுமட்டுமல்லாமல் கால் செய்யும் போது வரும் சிக்கல்களை இந்த புதிய ஆண்ட்ராய்டு 11 தீர்த்து வைக்கும் என்று நினைத்தார்கள்.. ஆனால் கிடைக்க வில்லை.
ஆனால் கொடுக்க வேண்டுமென்று ஒருசில அப்டேட்களை பேருக்கு கொடுத்து இருக்கிறார்கள் என்று குமுறுகிறார்கள் அந்த ஆண்ட்ராய்ட் பயன்பாட்டாளர்கள்.