கல்விதேர்வுகள்

மாணவர்களே உஷார் நீட் பற்றிய புது அப்டேட்

பிளஸ் டூ முடித்துவிட்டு மருத்துவராகும் கனவை மனதில்கொண்டு நீட் தேர்விற்காக காத்திருக்கும் மாணவச் செல்வங்களுக்கு புதிய அப்டேட்.

தேசிய சோதனை நிறுவனம் (என்.டி.ஏ) நீட் 2020 தேர்வை 13 செப்டம்பர் 2020 அன்று பேனா மற்றும் காகித அடிப்படையிலான முறையில் நடத்துகிறது.

விண்ணப்பங்களை திருத்த

நீட் தேர்வுக்கான விண்ணப்பங்கள் 2019 டிசம்பர் 2 தேதி முதல் ஜனவரி 6 தேதி வரை நடைபெற்றது. அதில் விண்ணப்பித்த அனைத்து மாணவச் செல்வங்களும் பிழை ஏதும் இருந்தால் தற்போது திருத்திக் கொள்ளலாம் என அதிகாரிகள் ஜூலை 4 முதல் 15 வரை அனுமதித்துள்ளனர்.

நீங்கள் திருத்த வேண்டும் என்றால் இந்த லிங்க் யூஸ் பண்ணுங்க.

https://ntaneet.nic.in/ntaneet/online/CandidateLogin.aspx

தேர்வு தேதி மற்றும் நேரம்

அட்மிட் கார்டை வெளியிட்டதோடு, நீட் 2020 தேர்வு தேதி மற்றும் நேரத்தை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை என்.டி.ஏ வெளியிட்டது.

13 செப்டம்பர் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 2 மணி முதல் 5 மணி அளவில் தேர்வு நடைபெற உள்ளது.

மாணவச் செல்வங்களே வருங்கால மருத்துவர்களே கொரோனா நமக்கு பல பாடங்களை கற்றுத் தந்து விட்டது ஆனாலும் நாம் கற்க வேண்டிய பாடங்கள் பல. எந்த விதத்திலும் மனதை தளரவிடாமல் உங்கள் லட்சியத்தை அடைய பாடுபடுங்கள். மருத்துவராகும் லட்சியம் கொண்ட நீங்கள் அயராது உழைத்து இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் இந்த சமயத்தில் படிப்பை மட்டுமே குறிக்கோளாக கொண்டு பாடுபடுங்கள்.

விண்ணப்பத்தை திருத்த வேண்டிய மாணவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய நாள் 15 ஜூலை 2020. அனைத்து வருங்காலம் மருத்துவர்களும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய தேர்வு தேதி 13 செப்டம்பர் 2020 நேரம் மதியம் 3 மணி முதல் 5 மணி வரை.

ஆல் தி பெஸ்ட் மாணவர்களே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *