செய்திகள்தமிழகம்

மீண்டும் புயலுக்கு வாய்ப்பா தனியார் வானிலை விளக்கம்

வங்கக் கடலில் உருவான நிவர் புயல் கரையை கடந்தன. ஆனால் தற்போது மீண்டும் ஒரு புயல் உருவாகும் என்ற தகவல் வெளியாகி வருகிறது. தனியார் வானிலை ஆய்வாளர் கருத்து தெரிவித்துள்ளார். புயலின் காரணமாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. மரங்கள் வேரோடு சாய்ந்தன.

  • நிவர் புயல் கரையை கடந்தன.
  • மீண்டும் ஒரு புயல் உருவாகும் என்ற தகவல் வெளியாகி வருகிறது.
  • புயல் உருவானால் பாதிப்பு இருக்குமா?

சென்னை வானிலை அறிக்கை

பெரும்பாலான வீடுகளில் வெள்ள நீர் புகுந்து சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடின. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வந்தன. தென்மேற்கு வங்க கடலில் நவம்பர் 29 புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை அறிக்கை தெரிவித்துள்ளன.

இது புயலாக மாறும் என்ற தகவல் பிறகு தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். மறுபடியும் ஒரு புயல் உருவாக பாதிக்குப் பாதி வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். டிசம்பர் இறுதி வரையிலான காலகட்டங்களில் உருவாக வாய்ப்பு இருக்கிறது.

புயல் உருவானால் பாதிப்பு இருக்குமா

மார்கழி மாத குளிர் காலத்தை பொறுத்து இது அமையும் என்று கூறுகிறார். குளிர் அதிகமாக இருந்தால் புயல் உருவாக வாய்ப்பு இல்லை. குளிரிலும் புயல் உருவானால் பெரிய பாதிப்பு இருக்காது. குளிருக்கு முன்னதாக புயல் உருவானால் பாதிப்பு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

புயல் உருவாகும் பட்சத்தில் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இருப்பதாகவும், சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் புயலின் வீரியம் அதிகமாக இருக்கும் என்றும் இவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *