ஆரோக்கியம்சமையல் குறிப்புயூடியூபெர்ஸ்வாழ்க்கை முறை

புதுசா ஒன்னு, கோதுமை மாவில் ரோல்..யாரும் பண்ணாத டேஸ்டி ரெசிபி

பரபரப்பாக மாறி வர இந்த காலகட்டத்தில் எதுக்கெடுத்தாலும் அது புதுசா இருக்கணும் யாரும் பயன்படுத்தாத தான் இருக்கணும் நான் தான் முதல்ல அதை யூஸ் பண்றவங்களா இருக்கணும் புதுசா ஒன்னு ட்ரை பண்ணி பாக்கணும்னு இந்த காலத்துல எல்லாமே புதுசா யாருமே செய்யாததா இருக்கணும் தான் எல்லாரும் ஆசைப்படுறாங்க. அது நம்ம உணவுலயும் மாறிட்டு தான் வருது ஆமா இப்ப நான் சாப்பாடு புது இடத்தில் புதுசா ஒன்னு ட்ரை பண்ணி சாப்பிடுவது எல்லாருக்கும் பிடித்தமான மாறிட்டு வருது இதெல்லாம் ஒரு சாப்பாடு சாப்பிடணும்னா அந்த ஊருக்கு போகணும்னு அவசியம் இல்ல பக்கத்துல இருக்க உணவகத்துக்கு போனாலே ஏழாவது உணவும் கிடைக்கிற அளவுக்கு மாறிட்டு வருது… அப்படி யோசிக்கிற உங்களுக்காக இது புது ரெசிபி இதோ…

கோதுமை மாவு ரோல் செய்முறை

முதலில் நீங்கள் எப்பொழுதும் சப்பாத்தி செய்வது போல் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்பு ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நறுக்கிய பெரிய வெங்காயம் 2, நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். சிறிது நேரம் கழித்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கிய பின்பு நறுக்கி வைத்த தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும் அதன்பின் துருவிய கேரட் துருவலை சேர்க்கவும்.

வெங்காயம் கேரட் தக்காளி ஆகிய மாற்றம் சிறிது நேரம் நன்றாக வதங்கிய பின்பு தேவையான அளவு உப்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், சிக்கன் மசாலா சிறிதளவு ஆகியவை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலக்கி விட்டு கொஞ்ச நேரம் வேக விடவும். இப்பொழுது நமக்கு தேவையான மசாலா ரெடி, இதன் பின்பு இரண்டு சப்பாத்திக்கு நடுவே நாம் தயார் செய்து வைத்த மசாலாவை சிறிது வைத்து நன்றாக ரோல் செய்து கொள்ளவும். செய்து வைத்து சப்பாத்தி ரோலை ஒரு இரண்டு நிமிடம் இட்லி பாத்திரத்தில் போட்டு இட்லி வேக வைப்பது போல் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வேகவைத்த சப்பாத்தி துண்டுகளை ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ,எள் சேர்த்து நாம் வேகவைத்த கோதுமை மாவு துண்டுகளை போட்டு எண்ணெயில் திரட்டி எடுக்கவும்.

அவ்வளவுதான் மொறு மொறு சுவையான மிக வித்தியாசமான கோதுமை மாவு ரோல் ரெடி. கொண்டு போய் உங்க குடும்பத்தில் இருக்காங்க கிட்ட கொடுத்து பாருங்க வேற லெவல் அப்படின்னு உங்கள பாராட்டுவாங்க..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *