திருப்பூரில் ‘பிரைவசி தியேட்டர்’ அறிமுகம்
ஸ்ரீ சக்தி சினிமாஸ் திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் இந்த தியேட்டரில் பிரைவசி தியேட்டர் கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பரவத் தொடங்கிய போதும் முடகத்தின் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு இருந்தன.
- கொரோனா பரவத் தொடங்கிய போதும் முடகத்தின் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு இருந்தன.
- திரையரங்கு செயல்பட்டும் மக்களிடையே நிலவும் அச்சம் காரணமாக அதிக அளவிலான கூட்டம் தியேட்டர்களில் வரவில்லை.
- தற்போது மக்களுக்கு பிரைவசி தியேட்டர் கவனத்தை ஈர்த்துள்ளது.
மக்களிடையே நிலவும் அச்சம்
பொதுமுடகத்தில் பல்வேறு துறைகளுக்கு தளர்புகள் அளித்த போதும் கேளிக்கை விடுதிகள், திரையரங்குகள் போன்றவற்றிற்கு இறுதியாக அனுமதி அளித்தது தமிழக அரசு. தற்போது திரையரங்கு செயல்பட்டு வந்தன. நடிகர்களின் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. மக்களிடையே நிலவும் அச்சம் காரணமாக அதிக அளவிலான கூட்டம் தியேட்டர்களில் வரவில்லை.
மேலும் படிக்க : கடலுக்கு அடியில் அசத்தலான பேனர்..
பிரைவசி தியேட்டர்
கொரோனா அச்சம் இன்னும் முழுமையாக மக்கள் மத்தியில் இருந்து விலகாத காலகட்டத்தில் அச்சம் இல்லாமல் தனியாக குடும்ப உறுப்பினர்களும் மட்டுமே பார்க்கக்கூடிய பிரைவசி தியேட்டர் நிச்சயம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்று மல்டிபிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர் கூறுகிறார்.
மல்டிபிளக்ஸ் தியேட்டர்
பிறந்தநாள் கொண்டாடும் பலரும் தியேட்டருக்கு சென்று படம் பார்க்க விரும்புவார்கள். அவர்களுக்கு இந்த பிரைவசி தியேட்டர் வழங்கப்படும். நூற்றி ஐம்பது பேர் அமரக்கூடிய ஒரு ஸ்கிரீனை இந்த பிரைவசி தியேட்டர்காக ஒதுக்கி வைத்துள்ளனர். 25 நபர்கள் வரை அனுமதிக்க ரூபாய். 4 ஆயிரம் கட்டணமாக செலுத்த வேண்டும். அதற்கு மேல் வரும் நபருக்கு 120 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.
மேலும் ஓடிக்கொண்டிருக்கும் எந்த படத்தை விரும்புகிறார்களோ அந்தப்படத்தை திரையிடப்படும். மல்டிபிளக்ஸ் தியேட்டர் என்பதால் இருக்கக்கூடிய எட்டு ஸ்க்ரீனில் நூற்றி ஐம்பது பேர் அமரக்கூடிய வசதி கொண்டுள்ளன. ஒரு ஸ்கிரீனை இந்த பிரைவசி தியேட்டருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
மக்களுக்கு பிரைவசி தியேட்டர் கவனத்தை ஈர்த்துள்ளது. சோதனை முயற்சியாக கொண்டுவரப்பட்ட இத்திட்டத்திற்கு மக்களிடையே பெரும் ஆதரவு இருப்பதாக உரிமையாளர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க ; வாத்தி படத்தில் வா வாத்தி பாடல் வரிகள்