புது அறிவிப்புகளால் தெறிக்கவிட்ட நிர்மலா சீதாராமன்..!!
ரேசன் கார்டுகள் இல்லாத மக்களுக்கு பருப்பு வகைகள் முழுமையாக இந்த கொரானா காலத்தில் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 8 கோடி பேருக்கு கார்டு இல்லாவிட்டாலும் பருப்பு வகைகள் வழங்கவுள்ளது.
புலம் பெயர்ந்த பணியாளர்களுக்கான தங்கும் இடம்:
புலம் பெயர்ந்த பணியாளர்களுக்கான ஏழை பணியாளர்களுக்கு செலுத்தக்கூடிய வகையில் சிறிய அளவில் அடிப்படையாக செலுத்த கூடிய தொகையை வாடகையாக பெற அரசு முழுமையாக இதனை செயல்படுத்தும். மாநில அரசு இதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதனுடன் இனைந்து மத்திய அரசு செயல்படும். புலம் பெயர்ந்த பணியாளர்களிடம் குறைவாக மட்டுமே வாடகைப் பெற வேண்டும். இது போன்ற அறிவிப்புகள் முழுமையாக செயல்படுத்தினால் நல்லாத்தான் இருக்கும்.
முத்ரா- சிசு லோன்ஸ்:
முத்ராவில் 50,000 வரை பெறுபவர்கள் 2% வட்டி அதனை குறைக்கவுள்ளது.
மார்ச் 2022 ஆம் ஆண்டு வரை கடன் தொகை மூலம் மானிய முறையில் மிடில் கிளாஸ் குடும்பங்களுக்கு உதவ இது வழங்கபடும். மிடில் கிலாஸ் குடும்பங்களுக்கு பயன் பெறும் வகையில் செயல்படும்.
வேலைவாய்ப்பு உருவாக்குதல்:
6000 கோடித் தொகையானது வேலைவாய்ப்புக்கு அரசு செலவிடவுள்ளது. மலைவாழ் மற்றும் ஆதிவாசி மக்களுக்கு ஒதுக்கவுள்ளது.
காடுகள் பராமரிப்பு, காடுகள் பாதுகாப்பு போன்ற பணிகள் அனைவருக்கும் அரசு வழங்கவுள்ளது. காடுகள் கட்டமைப்புக்காக முழுமைகயாக இதனை செலவிட உள்ளது. மாநிலத்தின் தேவைக்கு ஏற்ப காடுகள் பகுதிகளில் செயல்படுத்து சுற்றுச்சூழல் அமைச்சகம் உதவும். மேலும் அடுத்தடுத்து வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு ஆலோசித்து வருகின்றது.
30000 கோடித் தொகையானது நபார்டு மூலம் விவசாயிகளுக்கு வழங்க உள்ளது. ராபி பயிர்கள் விலைச்சலுக்கு வழங்க இதனைச் செலவிட சி வங்கிகள் மூலம் மற்றும் குறு விவசாயிகளுக்கு உதவும். கோ ஆப்ரேட் இந்தத் தொகையானது வங்கிகள் மூலம் இதனை வழங்கப்படும். இது நேரடியாக ஊரகப் பகுதி மற்றும் மற்ற நகர பகுதிவரை கரிப் பயிர்களுக்கும் அரசு வழங்கவுள்ளது. 3 கோடி விவசாயிகள் இதன் மூலம் பயன் அடைவார்கள்.
கிசான் கிரெடிட் கார்டு:
கிசான் கிரெடிட் கார்டு 2.5 கோடி பேருக்கு கன்செசனல் கடன்கள் பெறலாம். இந்த கடன் தொகையில் கிசான் கார்டில் மீனவர்கள், அனிமல் ஹஸ்பெண்டரி துறையினரும் இதில் கண்காணிக்கப்படுவார்கள். இதன் மூலம் விவசாயிகள் அனைவரும் பயன் பெறுவார்கள். இதன் மூலம் அரசு தனது பார்வையை முழுமையாக செலுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.