ஆன்லைன் திருமண நிகழ்ச்சி புதுவித உபசரிப்பு
சொந்தபந்தங்கள் உபசரிப்பு முதல் திருமண விருந்துகள் வரை கோலாகலமாக நடைபெறுவது திருமணம். தற்போது திருமணம் என்றாலே பல மாற்றங்களை சந்தித்துள்ளது. தென்னிந்தியாவில் திருமணங்களில் கண்கூடாக மாற்றங்களைப் பார்க்கலாம். குடும்ப உறுப்பினர்களைத் தவிர எல்லோரும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் நேரடி ஒளிபரப்பாக கண்டுகளிக்க முடிகிறது.
- திருமணத்திற்கு வர முடியாதவர்கள் ஆன்லைனில் திருமண நிகழ்ச்சியை காண.
- வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் நேரடி ஒளிபரப்பாக கண்டுகளிக்க.
- அறுசுவை விருந்தை வீட்டிற்கே கொண்டு சேர்க்கும் புது முயற்சி.
புதிய முறையாக
திருமணத்திற்கு வர முடியாதவர்கள் ஆன்லைனில் திருமண நிகழ்ச்சியை காண்பவர்களுக்கு என விருந்து உபசாரங்களை புதிய முறையாக ஏற்படுத்தியுள்ளன அரசு கேட்டரிங் குழுமம். அறுசுவை விருந்தை வீட்டிற்கே கொண்டு சேர்க்கும் புது முயற்சியை கையாளுகிறது. இந்த கேட்டரிங் குழுமம் சென்னையில் உள்ளது.
சூடாக டெலிவரி
அனைத்து உணவு வகைகளையும் தனித்தனியாக பேக் செய்து திருமணம் முடிந்த உடனே அனைத்துப் உணவுகளையும் டெலிவரி செய்து விடுகின்றனர். அனைத்து உணவுகளும் சூடாக டெலிவரி செய்கிறது. கல்யாணத்திற்கு வந்தால் என்னென்ன விருந்துகள் பரிமாறப்படும் அனைத்தும், மிஸ் ஆகாமல் டெலிவரி செய்கின்றனர். இந்த பார்சல் படி அதை எந்த வரிசையில் வைத்து பரிமாற வேண்டும் என்பதற்கு ஒரு குறிப்புகளையும் எழுதி வைத்துள்ளனர்.
ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக
36 வகை உணவுகளும் அப்பளங்கள் வீட்டில் வைத்துக் கொள்ள குறிப்புகளும் சேர்த்தே டெலிவரி செய்கின்றனர். மதியம் விருந்து ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவும் டெலிவரி செய்யப்படுகிறது. இதுவரை 5 திருமண நிகழ்வுகளுக்கு உணவு விருந்துகள் டெலிவரி செய்து கொடுத்துள்ளனர். சென்னையில் உள்ள தாஜ் கன்னிமேரா ஹோட்டலிலும் இதேபோன்று விருந்து உணவு உறவினர்கள் வீட்டிற்கு டெலிவரி செய்துள்ளனர். மூன்று சக்கர வாகனங்களில் டெலிவரி செய்யப்படுகிறது.