டெக்னாலஜி

2019 ஆம் ஆண்டு ரொனால்ட் க்விட் கார்கள் அறிமுகம்

க்விட் கார்கள் இந்தியாவிற்கு ஏற்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள க்விட் கார்கள் பாதுகாப்பு வசதிகளை அதிக்கப்படுத்தி வாடிக்கையாளர்களை திருப்தி  அடையச் செய்கின்றது. 

2019 ஆம் ஆண்டில் அறிமுக்கப்படுத்தப்பட்டுள்ள கார்களின் விலையானது  2.66 லட்சம் ஆகும். க்விட் கார்களில் இடம் பெற்றுள்ள வசதிகளாக மேம்படுத்தப்படட் இன்போடேய்ன்மெண்ட் சிஸ்டம் மற்றும் பாதுகாப்பு கிட்களும் கொடுக்கப்பட்டுள்ளது. 

ரொனால்ட் நிறுவன திட்டமிட்டப்படி மார்ச் மாதங்களில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை  கார்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளன. க்விட் கார்களின் இன்போடேய்மெண்ட் சிஸ்டம்கள் 7.0 இன்ச் டச் ஸ்கீரின் யூனிட்கள், ஆப்பிள் கார்பிள, ஆண்டிராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி குறைவான விலைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

சிஸ்டம், ப்ளூடூத், விடியோ பிளேபேக் வசதியும், புஷ்- டு- டாக் வசதியும் இடம் பெற்றுள்ளது.  யுஎஸ்பி சார்ஜ்ரகளுடன் அதிவேக சார்ஜிங் பங்கஷனும் இருக்கும் படி அப்பேட் செய்யப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு வசதிகளான டிரைவர் ஏர்பேக், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், பயணிகள் சீட் பெல்ட் அணிந்துள்ளனரா என்பதை நினைவு படுத்தும் ரிமைண்டர் மற்றும் ஸ்பீட் அலர்ட் சிஸ்டம்கள் இடம் பெற்றிருக்கும். 

க்விட் கார்களில் 54 ஹெச்பி, 0.8 லிட்டர் மற்றும் 68 ஹெச்பி லிட்டர் பெட்ரோல் இன்ஜின்கள் உள்ளன. 5 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. 1.0 லிட்டர்களில் கூடுதல் ஆப்சன் 5 ஸ்பீட் ஏஎம்டி கியர்பாக்ஸ் கிடைக்கும். 

ரொனாட் க்விட் கார்களின் விலையும் அதன் திறன்களும் மாருதி சுசூகி ஆல்டோ, டட்சன்ஸ் ரெடிகோ கார்க்களுக்கிடையே போட்டியை அதிகப்படுத்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *