செய்திகள்தேசியம்

எளிய பள்ளி மாணவர்களுக்காக மகாராஷ்டிராவில் புதுமையான பயிற்சி

கொரோனா காலத்தில் ஆன்லைன் கல்வி அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதற்கு நல்ல இணைய வசதிகள் வேண்டும். பெரும்பாலான பெற்றோர்களிடம் ஸ்மார்ட்போன்கள் கிடையாது. இவர்களுக்கு ஆன்லைன் என்பது தொலைதூர கனவாக இருக்கின்றது.

மாணவர்களுக்கு ஆன்லைன் இல்லாத குறையை வீட்டுச் சுவர்கள் தீர்த்து வைக்கின்றன. எழுத்துக்கள், எண்கள், வார்த்தைகள், இலக்கணம், கணித சூத்திரங்கள், பொது அறிவு, உள்ளிட்ட எளிமையான பாடங்களை சுவர்களில் வரையப்பட்டு கற்பிக்கப்படுகின்றன.

மகாராஷ்டிர மாநிலம், சோலாப்பூர் ஊரிலுள்ள வீட்டுச் சுவர்களில் பாடங்களை வரைந்து பள்ளி மாணவர்களுக்காக பாடம் நடத்தி வருகின்றனர். ஆசிரியர்கள் இங்கு நிலம் நகரில் உள்ள 300 வீட்டு சுவர்களில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பாடங்களை படங்களாக வரைந்து உள்ளார்கள்.

இங்குள்ள தொடக்கப் பள்ளியில் 1700 மாணவர்கள் படிக்கின்றார்கள். ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகள் ஆக அனைவரும் இருக்கிறார்கள். இவர்கள் பள்ளிக்கு வந்து படிப்பதே பெரும் கனவாக இருந்துவருகின்றது.

எளிமைப்படுத்தப் பட்ட பாடங்களில் இருந்து முக்கியமான பகுதிகளை மாணவர்களுக்கு புரியும் வகையில் ஓவியங்களாக தீட்டி கற்பிக்கின்றனர். நிலம் நகரைச் சேர்ந்த ஆஷா மராட்டிய வித்யாலயா தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராம் கெய்க்வாட் “இந்த சுவர்ப்படங்கள் மாணவர்களுக்கு உதவியாக இருப்பதாகவும் சமூக இடைவெளியை என்று அவர்கள் படிப்பதாகவும்” கூறினார்.

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில நகரங்கள் மற்றும் வசதியான கிராமங்களில் மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. மின்சார வசதி கூட இல்லாத கிராமங்களில் படிக்கும் மாணவர்கள் என்ன செய்ய முடியும்? இதற்கு தீர்வாக இருக்கிறது இந்த ஊர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *