ஆர் ஜே பாலாஜியின் ஐடியாவா இது அடிதூள்!
கொரோனா வந்தாலும் வந்துச்சு எல்லாரையும் ரொம்ப திண்டாட அடிக்குது ஆனா நம்ம 10,11 பசங்க மட்டும் தப்பிச்சுடாங்க. மத்த எல்லா கிளாஸும் வீட்டிலிருந்து கிளாஸ் அட்டென்ட் பண்ற மாதிரி ரொம்ப தொல்லை பண்றாங்க.
அரிசி மூட்டை மாதிரி ஒரு புத்தகம் பை மற்ற பசங்களோட சேர்ந்து பேசிட்டே போற சுகம் தனி அதை விட்டுட்டு வீட்டிலிருந்து போன் கம்ப்யூட்டருக்கும் முன்னாடி எவ்வளவு நேரந்தான் உட்கார்வது!
பெரியவர்களான நமக்கே அதுக்கு முன்னாடி தொடர்ந்து அரை மணி நேரம் உட்கார்ந்து இருப்பது கஷ்டமா இருக்கு. இதுல காலையில இருந்து சாயங்காலம் வரைக்கும் ஸ்கூல் மாதிரி இந்த சமூகத்தை சோம்பேறியா மாத்தின கேட்ஜெட்ஸ் முன்னாடி அட்டென்ட் பண்ணுனா எவ்ளோ கஷ்டமங்க.
7 மணிலேருந்து 8 மணி நேரம் நம்ம பள்ளி வாழ்க்கையே ஒரு தனி சுகம். அது மணி நேரம் கணினி அல்லது கைபேசி முன்னாடி உட்கார்ந்து சாத்தியமா!
ட்ரரர டன் டன் டன் டன் டன் டன்…
நம்ம ஆர் ஜே (வானொலி தொகுப்பாளர்) பாலாஜி செமய கொந்தலிச்சிருக்காருனு சொல்லலாம்.
‘7.30-2.30 (அ) 8.30-3.30 என்ற தினசரி பள்ளி நேரத்தை வீட்டிலிருந்து ஆன்லைனில் பாடம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களும் அதை கவனிக்கும் மாணவர்களுக்கும் பல சேலஞ்ஷஸ் இருக்கு.
ஒரு வீட்டில் மூணு குழந்தை இருக்குனா எவ்ளோ கணினி எவ்வளவு கைபேசி வச்சு பெற்றோர் யாரகவனிக்க முடியும்! எல்லாரும் வசதியானவங்கலா பசங்களுக்கு ஒரு ரூம் தனியா ஒதுகிற நிலைமையில இருப்பாங்களா! இவ்வளவு நாட்களாக கணினி கைப்பேசியை உபயோக படுத்தாத என்று கண்டித்த பெற்றோர்கள் போக இப்ப அத பாருங்க சொல்ற நிலைமைக்கு கொண்டு வந்துட்டாங்களே!’ என்று வானொலி தொகுப்பாளராக கூறியவர் அவரும் ஒரு குழந்தையோட தந்தை யோசிச்சு பல வழிகளை பகிர்ந்திருக்கிறார். பரவாயில்லையே ஐடியா சூப்பரா இருக்கு.
‘ஆசிரியர்கள் பாடங்களை காணொளியாக பதிவு எடுத்து மாணவர்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது படித்து பின் வீட்டுப் பாடங்களை சமர்ப்பிக்குமாறு கால அவகாசம் கொடுக்க வேண்டும்.’
என்னடா திடீர்னு சுத்த தமிழ்ல சொல்லிட்டேன்னு பார்த்தீர்களா!
‘ஒன்னும் இல்லங்க மிஸ்ஸ வீடியோ எடுத்துட்டு அதை பசங்களுக்கு அனுப்பிச்சுட்டா பெற்றோர்கள் அதை படிக்க வைத்து ஓரிரு நாட்களில் அசைன்மென்ட் சம்மிட் பண்ணலாம்’ அப்படின்னு ஐடியா கொடுத்து இருக்காரு.
குரோனா மட்டும் ஒரு மனுஷனா இருந்தா ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ அப்படினு கேட்டிருக்கலாம்.
ஆனா அது தப்பிச்சிடிச்சு… நம்ம பசங்க ரொம்ப பாவங்க…