டெக்னாலஜி

டாடாவின் சீட்டர் எக்ஸ்யூவின் சீட்டாவை போல் சீறிவருகின்றது!

இந்தியாவில் அறிமுகமாகும் டாடா மோட்டார்ஸ்  நிறுவனத்தின்  புதிய 7 சீட்டர் எக்ஸ்யூவியின் பெயர் விவரம் வெளியாகவுள்ளது. 

ஜெனிவா மோட்டார்ஸ் நிறுவன கண்காட்சியில் பஸ்ஸார்டு என்ற பெயரில் சீட்டர் கான் செப்ட் எஸ்யூவியை  சாட்சிக்கு வைத்திருந்தது. ஜனவரி மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹாரியர் எஸ்யூவியின் சீட்டர் மாடலாக இந்த பஸ்ஸார்டு எஸ்யூவி வர இருக்கின்றது.

டாடா பஸ்ஸார்டு கான்செப்ட் எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடாலானது இந்தியாவில் அறிமுகமாகும் என தகவல்கள் கிடைக்கின்றது. டாடாவின் எஸ்யூவியானது கசினி என்ற பெயரில் வரவுள்ளது  என்ற தகவல்கள் கிடைக்கின்றது.  பிரான்ஸ் நாட்டு கசினி என்ற விண்வெளி ஆய்வாளரின் நினைவாக செயற்கைகோளுக்கு பெயர் சூட்டப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

புதிய பஸ்ஸார்டு எஸ்யூவிக்கு கசின், மற்றும் கசினி, ஷிக்ரா மற்றும் டிமெரோ போன்ற பெயர்கள் தேர்வு நிலையில்வைத்து கசினி உறுதியாகியுள்ளது. 

 டாடா கசினி எஸ்யூவியானது 4,661 மிமீ  நீளம், 1894 மிமீ அகலமும் 1,786 உயரம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. 

எஸ்யூவில் 2-0 கசினி 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இதன் எஞ்சின் அதிகபட்சமாக 170 பிஎஸ்பி பவரையும் 350 என்எம் டார்க் திறன் கொண்டதாகவுள்ளது. எஸ்யூவியில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்  ஆப்சன்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

டாடா கசினி எஸ்யூவி 16 லட்சம் முதல் 21 லட்சம் வரையிலான எக்சோரும் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்தரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவிக்கு நேரடி போட்டியாக பார்க்கப்படுகின்றது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *