நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள் ஒரு பார்வை..!
கோவித் பிரச்சனைகளை இந்தியா எதிர் கொள்ள வேண்டியது முழுமையாகத் தயாராக வேண்டும். விவசாயிகளுக்கு நேரடியான பொருளாதார முன்னேற்றத்தை கொடுக்க இந்திய அரசு எப்பொழுதும் தயாராக இருக்கின்றது.
இந்தியாவில் 3 கோடி விவசாயிகளுக்கு 4.22 லட்சம் தொகையானது கிஷான் கிரெடிட் கார்டு மூலம் கொடுக்கப்படும்.
ஊரகத்தில் நேரடி பணப்பரிமாற்றம்:
கோவித்-19 சூழலில் உலகமே ஊரடங்கில் உழன்று கொண்டிருக்கையில், இந்தியா விவசாயக் கடன்கள் நபார்டு வங்கி மூலம் 29,000 கோடித் தொகையானது மார்ச் மாதம் வழங்கப்பட்டுள்ளது.
ஊரக அடிப்படை கட்டமைப்பு பணிக்கு 4,200 கோடி தொகையானது செலவிடப்பட்டுள்ளது. விவசாய தயாரிப்புகளுக்கு முதலிட்டு தொகையாக ரூபாய் 6,700 தொகையானது, மாநில அரசு மூலம் மார்ச் மாதம் வழங்கப்பட்டுள்ளது.
நகர ஏழை மக்கள்:
ஊரடங்கில் கடந்த 2 மாதங்கள் இந்திய அரசு மாநில அரசுகள் மூலம் உணவு மற்றும் நீர் கொடுத்துள்ளது. 11 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. அது முழுமையாக மாநில அரசு மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.
வீட்டில்லாத இடம்பெயர்ந்த நகர மக்களுக்கு 3 வேளையும் உணவானது மத்திய அரசு வழங்கியுள்ளது. அதுவும் ஊரடங்கு காலத்தில் வழங்கியுள்ளது.
12,000 சுய உதவிக்குழுக்கள் 3 கோடி மாஸ்க்குகள், 1.20 கோடி அளவு சானிட்டைசர்கள் தயாரித்துள்ளன. மத்திய அரசின் மூலம் இவை செய்யப்பட்டுள்ளன. நகரத்தில் வாழும் ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பானது வழங்கப்பட்டுள்ளது.
7,200 புது சுய உதவிக்குழுக்கள் புதிதாக மார்ச் 15, 2020 ஆம் தேதி முதல் உருவாக்கப்பட்டு மக்களுக்குத் தேவையானதை செய்து வருகின்றது.
புலம் பெயர்ந்த பணியாளர்கள் இடம்பெயர வாய்ப்பு:
பணிகளுக்காக இடம் பெயர்ந்த பணியாளர்கள் அவர்களின் சொந்த ஊர் திரும்ப அவர்களுக்கான அனைத்து வசதிகளும் மத்திய அரசு செய்து தரும். இதுவரை 1000 கோடி தொகையானது செலவு செய்யப்பட்டுள்ளது. கிராம பஞ்சாயத்துக்களுக்கு 1.87 லட்சத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளது.
இம்மக்களுக்கான வருமானம் தொகையானது 202 தொகையிலிருந்து 182 வரை வழங்கப்படுகின்றது.
தொழிலாளர்கள் நலன்:
தொழிலாளர்கள் நலன் குறித்து அரசானது முழுமையாக கண்காணிக்கின்றது. அனைவருக்கும் குறைந்தப் பட்ச தொகைகள் வழங்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி செயல்பட வேண்டும் அரசு அனைவருக்கும் அறிவித்துள்ளது.
பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்பதையும் அரசு அறிவித்துள்ளது. இஎஸ்ஐசி அனைவருக்கும் விரிவுப்படுத்தியுள்ளது. இஎஸ்ஐசி அனைவருக்கும் வழங்க அரசானது அறிவித்துள்ளது.
அனைத்துப் பணிகளும் பெண்களுக்கு மீண்டும் திறக்க வேண்டும். இரவு வேலையாக இருப்பின் செய்யலாம். ஆனால் முழுமையாக பாதுகாப்பு பெண்களுக்கு உறுதி செய்திருக்க வேண்டும்.