ஆரோக்கியம்மருத்துவம்வாழ்க்கை முறை

வைரஸ் தாக்கும் என நினைத்துக்கூட பார்த்ததில்லை -1

சென்னையை  சேர்ந்த நபர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டதை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். இந்த வைரஸ் என்னையும் தாக்கும் என நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. மிக எச்சரிக்கையாய் இருந்தேன். முக கவசத்தோடு தான் வெளியில் செல்வேன், கைகளில் கையுறை அணிந்து இருப்பேன், சானிடைசர் பயன்படுத்துவேன். இந்த கருத்தை பேஸ் புக்கில் பகிர்ந்துள்ளார்.

1- ம் நாள் காலையில் ஒருவிதமான சோர்வு இருந்தது, சரி இரவு தூக்கம் சரியில்லை போல என என்னை நானே தேற்றிக் கொண்டு அன்றாட அலுவல்களை கவனிக்க சென்றேன்.
நேரம் செல்லச் செல்ல ஒருவிதமான குளிர் ஊடுருவ தொடங்கியதையும், உடல் அடிக்கடி பதட்ட படுவதையும் என்னால் உணர முடிந்தது. மதியம் மூன்று மணிக்குள்ளாக அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு வீட்டிற்குள் அடைந்துவிட்டேன்.
சுரம்:99°.

2ம் நாள் லேசான ஜுரம் இருந்தது தொண்டையில் ஒருவிதமான கரகரப்பும், வயிற்றில் உணவு செரிக்காத ஒருவித உணர்வும் இருந்தது. உடல் லேசாக நடுங்குவதை உணர முடிந்தது. என் நிலை கண்டு என் மனைவி பதட்டம் அடைவதை பார்க்க முடிந்தது.
எனக்கு கழிவறையுடன் கூடிய தனி அறை ஒதுக்கி தரப்பட்டது. நான் என்னைத் தனிமைப் படுத்திக் கொண்டேன். சுரம்:99°

3ம் நாள் சுவாசம் வேகமாக நடைபெற்றது. முழு சுவாசம் நடைபெறவில்லை முழு சுவாசத்திற்கு முயற்சி செய்தால் இரும்பல் வந்தது. கிட்டத்தட்ட உறுதி செய்து விட்டேன் நான் பிரச்சினையில் இருக்கிறேன் என்று. மிக நெருங்கிய நல்ல நண்பர்களுக்கு என் நிலையை விளக்கினேன். யாரும் என்னை பயப்படுத்தவில்லை மாறாக உற்சாகப்படுத்தினார்கள். பயப்பட வேண்டாம் என்றார்கள், உணவு முறைகளை பரிந்துரைத்தார்கள். எனக்காக அக்கறை எடுத்துக் கொண்டார்கள். சுரம்:99°.

(உணவு முறை- 45 நிமிடத்திற்கு ஒருமுறை சூடான பானம் ஏதாவது ஒன்று- வெந்நீர், டீ, இஞ்சி சாறு, ரசம், சூப், லெமன் டீ, சித்தரத்தை கசாயம் etc) (கபசுரக் குடிநீர் இரு முறை மட்டும்).
குளிர்ந்த உணவு இல்லாமல் வாய்க்கு பிடித்த எந்த உணவையும் சாப்பிடலாம். ( சைவம் என்றால் கொண்டை கடலை சுண்டல் தினமும், அசைவம் என்றால் முட்டை, கோழி)

4ம் நாள் தொண்டையில் அடிக்கடி யாரோ துளையிடுவது போன்று ஒரு வலி. ஒட்டுமொத்த உடலிலும் வலி. அந்த நேரத்தில் என்னுடைய மிகக் கடினமான செயல் என்னவென்றால் படுக்கையிலிருந்து எழுந்து வெந்நீர், உணவு எடுத்துக்கொள்வது. சிறுநீர் கழிக்க செல்வது. சுரம்:99°.

(ஆவி பிடிப்பது மிக முக்கியம், நம் பாரம்பரிய ஆவி பிடிக்கும் முறைகளை விட, 300 ரூபாய்க்கு விற்கும் எந்திரம் (Vaporizer) எளிதானது. அந்த நீரில் ஒரு பல் பூண்டு அதே அளவு இஞ்சி சிறிது மஞ்சள் தூள் ஒரு வெத்தலை கசக்கி போடவேண்டும். வரும் ஆவியை புனல் கொண்டு சிகரெட் பிடிப்பது போல் இழுக்க வேண்டும், இரும்பல் வரும் பயப்பட வேண்டாம். (இது நுரையீரலில் தங்கியுள்ள கிருமிகளை கொன்று வெளியே கொண்டு வரும்). ஒரு நாளைக்கு மூன்று நான்கு முறை செய்தால் நலம்.

5ம் நாள் உடல் சோர்வடைய தொடங்கிவிட்டது படுக்கையில் திரும்பிப் படுப்பது என்பது ஒரு மிகப்பெரிய சவாலான காரியமாக மாறிப்போனது. உடலின் ஒவ்வொரு செல்களிலும் வலி மட்டுமே பிரதானமாக இருந்தது. சுரம்:99°

6ம்நாள் படுக்கையிலிருந்து எழ மிகவும் சிரமப்பட்டேன். உணவருந்துவது குறித்த உணர்வே இல்லாமலிருந்தது. எனது உடல் தன்னுடைய தேவையான பசி,தாகம்,குளிர் வெப்பம் இது குறித்து எனக்கு தகவல் தெரிவிக்கவில்லை.

நானே மிகவும் சிரமப்பட்டு ஒவ்வொன்றாக புரிந்துகொண்டேன். எனது சகோதரன் ஆக்சி மீட்டர் என்ற கருவியை வாங்கி வந்து கொடுத்தான். அதில் ஆக்ஸிஜன் அளவு 92 என்றால் உடனே மருத்துவமனைக்கு செல்லும்படி கூறினான். நல்ல வேலை எனக்கு 95 முதல் 99 வரை மாறி மாறி ஆக்சிஜன் அளவு இருந்தது.
சுரம்:99.4°

7ம் நாள் இரவு, ஒரு முறை தரையில் மயங்கி விழந்தேன், எவ்வளவு நேரம் என தெரியாது, ஆனால் நானே எழுந்து விட்டேன், அதன்பின் நல்ல மாற்றம். அடுத்த பதிவில் பார்ப்போம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *