மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி…டீ, காபி விலை உயர வாய்ப்பு..!
நாட்டில் அதிகரித்து வரும் பனவீக்கம் காரணமாக தங்களது தயாரிப்பு பொருட்களின் விலையை உயர்த்தவுள்ளதாக ஹிந்துஸ்தான் யுனிலீவர் மற்றும் நெஸ்லே நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஹிந்துஸ்தான் யுனிலீவர் மற்றும் நெஸ்லே ஆகிய நிறுவனங்கள் மார்ச் 14 முதல் தேநீர், காபி, பால் மற்றும் நூடுல்ஸ் ஆகியவற்றின் விலையை உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக விலையை உயர்த்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து 12 ரூபாய் மதிப்புள்ள மேகி 14 ரூபாய்க்கு விற்கப்படும் என கூறப்பட்டுள்ளது
தேயிலை விலை உயர்வு:-
ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் புரூ காபி விலையை 3-7% உயர்த்தியுள்ளது. அதே நேரத்தில், புரூ கோல்டு காபி ஜாடிகளின் விலையும் 3-4% வரை உயர்ந்துள்ளது. ரெடிமேட் காபி பைகளின் விலை 3% லிருந்து 6.66% ஆக உயர்ந்துள்ளது.
தாஜ்மஹால் தேயிலை விலை 3.7% இல் இருந்து 5.8% ஆக அதிகரித்துள்ளது. புரூக் பாண்ட் வகைகளின் தனித்தனி டீகளின் விலை 1.5% முதல் 14% வரை உயர்ந்துள்ளது.
பால் பவுடரும் விலை உயர்ந்தது:-
ஒரு லிட்டர் A+ பாலின் விலையையும் நெஸ்லே உயர்த்தியுள்ளது. இதற்கு முன்பு ரூ.75க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.78 ரூபாய்க்கு விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Nescafe Classic காபி தூள் விலை 3-7% அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், 25 கிராம் நெஸ்கபே பேக் இப்போது 2.5% விலை உயர்ந்துள்ளது.