மீண்டும் வெடிக்கும் நீட்:- மக்களவையில் எம்பிக்கள் வெளிநடப்பு..
நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் இருந்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்துள்ளது.
தமிழக சட்டப்பேரவயில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி, அதனை ஆளுநரின் ஒப்புதலுக்கு, அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று நீட் தேர்வுக்கு எதிரான சட்ட வடிவை ஆளுநர் என்.ராவி சபாநாயகருக்கு திருப்பி அனுப்பி வைத்தார்.
இதற்கு பல்வேறு கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனைதொடர்ந்து நேற்று பாராளுமன்றத்தை தமிழக எம்பிக்கள் ஒற்றுமையாக திணறடித்து வந்தனர். அதனைதொடர்ந்து இன்று நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் இருந்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்துள்ளது. அவர்களை தொடர்ந்து , காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா, நீட் தேர்வை அறிமுகப்படுத்திய பிறகு கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக்கனியாக மாறிவிட்டது
. ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என தெரிவித்தார்.