நீட் தேர்வுக்காக தற்கொலை கோலைத்தனம்
தமிழகத்தில் நீட் தேர்வு அச்சம் காரணமாக மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்பது பேரதிர்ச்சியை உண்டாக்கி இருக்கின்றது. தமிழ்நாட்டில் மாணவர்கள் தங்கள் திறன்மீது நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். ஆனால் தேர்வு பயத்தால் தற்கொலை செய்தல் என்பது கோழைத்தனத்தை காட்டுகின்றது.
மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நடத்தப்படும் நீட் தேர்வு விடை எதிர்கொள்ள முடியாமல் அதற்காகப் பயந்து மதுரையில் மாணவி ஜோதி துர்கா தர்மபுரியில் மாணவர் ஆதித்யா போன்றவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு இடையன் பரப்பு பகுதியைச் சேர்ந்த எலெக்ட்ரிக் கடை உரிமையாளர் மகன் முருகேசன் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கின்றார். அவர் இந்த முறை மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுத உள்ளார்.
தேர்வில் தேர்ச்சி பெறுவோமா என்ற அச்சம் காரணமாகத் தூக்கிட்டு கொண்டிருக்கின்றனர். ஒரே நாளில் மூன்று பேர் நீட் தேர்வு பயம் காரணமாகத் தூக்கிட்டு கொண்டிருப்பது மிகுந்த சோகத்தை உண்டாக்கியிருக்கிறது. மேலும் தமிழ்நாட்டில் மாணவர்கள் சிறு சவால்களைக் கூட எதிர்கொள்ள முடியாத மாணவர்களாக இருக்கின்றனர் என்று அரசு மிகுந்த ஏமாற்றத்துடன் காணப்படுகின்றது.
தேர்வுக்காக உயிரை மாய்த்துக்கொள்ளும் கோழைத்தனம் என்பது மாணவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். மாணவர்களின் பெற்றோர், அரசு இருதரப்பும் இளைஞர்களின் நலன் கருதி எதிர்கால இளைஞர்களை ஆற்றல் மிக்கவர்களாக மாற்றப் முறையான பயிற்சிகளுடன் அனைத்து மாணவர்களை வலிமைப்படுத்த திறமை உடையவர்களாக உருவாக்கப்பட்டதாகும். ஆனால் இது தவறான முன்னுதாரணமாக மாணவர்கள் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இது பெயர் இழப்பை அவர்களுக்கு உண்டாக்கி இருக்கின்றது.
தேர்வுக்காக மரணமென்றால் மிகுந்த கோழைத்தனத்தை காட்டுகின்றது. முறையாகத் திட்டமிட்டு கடின உழைப்பைக் கொடுத்துத் தொடர்ந்து பயிற்சி செய்து படித்த பாடங்களைத் தேர்வுமூலம் டெஸ்டில் படித்து டெஸ்டுகளில் உள்ள மதிப்பெண்களைக் கொண்டு செய்த தவறுகளைத் திருத்தித் தேர்வை எதிர்கொள்ள வேண்டியது ஒரு உண்மையான மாணவரின் கடமையாகும்.
இவை அனைத்தும் செய்யாமல் மன உளைச்சல் காரணமாகத் தற்கொலை செய்து கொள்வது கோழைத்தனத்தை காட்டுகின்றது. இலக்கைச் சரியாக நிர்ணயித்து மாணவர்கள் தங்கள் வாழ்வை மற்ற மெனகெடல் வேண்டும், தற்கொலை முடிவை மாணவர்கள் பின்பற்றக் கூடாது. இது போன்ற சம்பவம் இனி நடக்கக் கூடாது. அரசு இதுகுறித்து தீவிரமாகச் செயல்பட வேண்டும். இதை வைத்து அரசியல் சாயம் பூசி மகிழும் பல கட்சிகளை முழுவதுமாக அடக்க வேண்டும்.
சவால்கள் என்றால் என்ன, அதன் வீரியம் எப்படிப்பட்டதாக இருக்கும். நம் முன்னோர்கள் பட்ட கடினமான சூழலுக்கு முன் நாம் படும் கடின சூழல் எல்லாம் பெரிதல்ல என்ற ஊக்குவிக்குப்பு மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும்.