நாடு முழுவதும் கொரோனா சவால்களுக்கு இடையே தேர்வு எழுதிய மாணவர்கள்!
நாடு முழுவதும் 15 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தனர். நீட் தேர்வு மருத்துவ படிப்புக்கு நுழைவுத் தேர்வு மாணவர்களுக்காக நாடு முழுவதும் நடைபெற்றது. நீட் தேர்வு மூலமாக தகுதியான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மருத்துவ படிப்புக்கான மதிக்கப்படுகின்றனர்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடத்தக் கூடாது என்று பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. நீட் தேர்வின் முக்கியத்துவம் கருதி எனினும் நீர் தேர்வின் முக்கியத்துவம் கருதி அதனை அரசு நடத்துகின்றது. நீட் நுழைவுத்தேர்வினை சுமார் 1.17 லட்சம் பேர் தமிழ்நாட்டில் எழுதினார்கள். நாடு முழுவதும் 16 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள். பிளஸ் டூ முடித்த மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற படிப்புகளில் சேர நீட் தேர்வைத் தேர்ச்சி பெற்று மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
3843 மையங்கள் இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட இருக்கின்றது. மே 3ஆம் தேதி எழுதவேண்டிய தேர்வு ஊரடங்கு காரணமாகச் செப்டம்பர் 13ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. பல்வேறு சவால்களைக் எதிர்க் கொண்டு இன்று வெற்றிகரமாக முடிந்திருக்கின்றது. பலத்த பாதுகாப்பு மற்றும் பரிசோதனைக்குப் பின்னர் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. 14 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்று உள்ளனர். நாட்டில் 14 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. கடந்த ஆண்டு ஒரு தேர்வறையில் 24 மாணவ மாணவியர் தேர்வு எழுதினார்கள். நடப்பாண்டில் ஒரு தேர்வறையில் 12 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர்.
ஆசிரியர்கள், மாணவர்கள் அடிக்கடி கைகளை சானிடைசர்கள் சுத்தம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். உடலின் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு தேர்வு மையத்துக்குள் மாணவர்கள் ஆசிரியர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையத்துக்குள் மாணவர்கள் பரிசோதிக்கப்பட்டு அனுப்பு பட்டனர். மாணவர்கள் ஹால் டிக்க்டெட் மூலம் பரிசோதிக்கப்பட்டு தேர்வு மையத்திற்கு அனுமதிக்கப்பட்டனர் முறைகேடுகள் எதுவும் நடக்காத வரை தேர்வு முழு கண்காணிப்புடன் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.