NEET தேர்விற்கான அறிவியல் முக்கிய வினா விடைகள்
கடலில் பயணத்தை தொடங்கும் போது கரைகள் மறைகிறது என்று அச்சப்படக்கூடாது. கறைகளைக் கடக்கும் துணிவிருந்தால் தான் பல கடல்களை கண்டுபிடிக்க உங்களால் முடியும்..
வினா விடைகள்
1. பயோரியா வியாதிகள் உடலில் எந்த பகுதி பாதிப்படையும்?
விடை : பற்கள்
2. X கதிர்களைக் கொண்டு குணப்படுத்தப்படும் நோயின் பெயர் என்ன?
விடை : புற்றுநோய்
3. தோல் அலர்ஜி குடல் அலர்ஜி போன்ற நோய்கள் எதன் குறைபாட்டால் ஏற்படுகிறது?
விடை : வைட்டமின் பி 7
4. நரம்பு மண்டலத்தின் அமைப்பு மற்றும் செயலின் அடிப்படையாக யாது?
விடை : நியூரான்கள்
5. எந்த திரவத்தில் மூளை மிதந்த நிலையில் இருக்கும்?
விடை : மூளை தண்டுவட திரவம்
6. மனித மூளை 60% எவற்றால் ஆனது?
விடை : கொழுப்பால் ஆனது
7. வைட்டமின் D குறைபாட்டால் ஏற்படும் நோய் என்ன?
விடை : ரிக்கெட்ஸ், ஆஸ்டியோமலாசியா
8. ரத்தத்தை எடுத்து செல்ல முடியாத பகுதிகளுக்கு ஊட்டச்சத்தையும் , ஆக்சிஜனையும் வழங்குவது எது?
விடை : நிணநீர்
9. இதயத்தின் சுழற்சி எத்தனை வினாடிகளில் முடிவடையும்?
விடை : 0.8 வினாடி
10. உடலில் நோயை எதிர்த்து செயல்படுவது எது?
விடை : வெள்ளை அணுக்கள்