NEET தேர்விற்கான அறிவியல் முக்கிய வினா விடைகள்
சொற்களை விட செயலே பெரிய மாற்றத்திற்கு வழிவகுக்கும், எனவே பேச்சு குறைத்துக் கொண்டு செயலில் கவனம் செலுத்துவோம். இலக்கை அடைவதில் மட்டும் கவனம் செலுத்தி அதற்குண்டான செயல்களை செய்தால் வெற்றி நிச்சயம்….
வினா விடைகள்
1. கோழி தனது குஞ்சுகளை பறிக்க எத்தனை நாட்கள் ஆகும்?
விடை : 21 நாட்கள்
2. நைட்ரஜன் வாயுவை கண்டுபிடித்தவர் யார்?
விடை : டேனியல் ரூதர்போர்டு
3. போலியோ சொட்டு மருந்தினை கண்டுபிடித்தவர் யார்?
விடை : ஜோனல் சால்க்
4. பென்சிலின் என்பது எதனை குறிப்பிடுகிறது?
விடை : உயிர் எதிரி
5. பாலில் இருக்கும் கலப்படத்தை கண்டறிய உதவும் கருவி எது?
விடை : பால்மானி
6. திட கார்பன் டை ஆக்சைடு என்பது என்ன?
விடை : உலர் பனிக்கட்டி
7. துண்டிக்கப்பட்ட டிஎன்ஏ துண்டுகளை இணைக்க பயன்படும் நொதியின் பெயர் என்ன?
விடை : லைகோஸ் நொதி
8. இந்திய தொல் தாவரவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
விடை : பீர்பால் சஹானி
9. பாறைகளில் புதை உயிர் படிவங்கள் உருவாவதற்கு என்ன பெயர்?
விடை : படிவமாதல்
10. தலைமை சுரப்பி என்று அழைக்கப்படும் சிறப்பு எது?
விடை : பிட்யூட்டரி சுரப்பி