NEET தேர்விற்கான அறிவியல் வினா விடைகள்
துணிந்து முயற்சிக்க தயங்காதே தயங்கினால் வாய்ப்பை இழக்க நேரிடும். கணியாதது பழம் ஆகாது. துணியாத வரை அனுபவத்தால் மனம் பக்குவப்பட்டு கணியாது, அனுபவம் இல்லாதவன் வெற்றிக்கனியை சுவைக்க இயலாது. வெற்றியோ தோல்வியோ துணிந்து முயற்சித்தால் தான் அனுபவம் கிட்டும், அனுபவமே அடுத்த வெற்றிக்கான அடிக்கல்…
1.கீட்டோன் வரிசையின் முதல் சேர்மம்
விடை : அசிட்டோன்
2.40 சதவீத பார்மால்டிஹைடின் நீர்க்கரைசலின் பெயர்
விடை : பார்மலின்
3.100 சதவீத மறுசுழற்ச்சி செய்யப்படும் பொருள்
விடை : கண்ணாடி
4.100 சதவீத தூய எத்தில் ஆல்கஹால் இவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை : தனி ஆல்கஹால்
5.செயற்கை இழைகளுக்கு உதாரணம்
விடை : பாலியெஸ்டர், நைலான், ரேயான்
6.கேண்டி திரவம் என்பது
விடை : பொட்டாசியம் பெர்மாங்கனேட்
7. மோர்ஸ் உப்பின் வேதிப்பெயர்
விடை : சோடியம் சல்பேட்
8.அதிக அளவு பொட்டாசி யம் அயோடைடில் கரைக்கப்பட்ட மெர்க்குரிக் அயோடைடு கரைசல்
விடை : நெஸ்லர் கரணி
9.பார்மால்டிஹைடுடன் அம்மோனியா வினைபுரிந்து கிடைக்கும் கரிமச் சேர்மத்தின் பெயர்
விடை : யூரோட்ரோபின்.
10.சலவைப் பொருட்களின் அயனிப்பகுதி
விடை : -SO3- Na+