NEET தேர்விற்கான அறிவியல் முக்கிய வினா விடைகள்
எந்த சவால்களையும் தாங்க நான் தயாராக இருக்கிறேன் ஏனென்றால் சவால்கள் அற்ற வாழ்க்கை சுவையற்ற உணவு போன்றது.. எதையும் சவாலாக எடுத்து வெற்றிப்பாதையை நோக்கி முன்னேறுங்கள்
வினா விடைகள்
1.இழப்பு மீட்டல் பண்பு காணப்படும் உயிரி எது?
விடை : பிளனேரியா
2. பறவைகளின் முட்டைகள் எந்த வகையைச் சார்ந்தவை?
விடை : மெகாலெசித்தல்
3. கணுக்காலிகளின் உடற்குழி எந்த வகையைச் சார்ந்தது?
விடை : சைசோசீலம்
4. இறால் ஒரு ?
விடை : கிரஷ்டேஷியஸ் உயிரி ஆகும்
5. திமிங்கலம் – அமோனோடெலிக் இந்த இணை சரியா ? தவறா?
விடை : சரி
6. மிட்ரல் வால்வு இதனிடையில் காணப்படுகிறது?
விடை : இடது ஆரிக்கிள் ,இடது வெண்டிரிக்கிள்
7. ஈஸ்டின் காற்றில்லா சுவாசத்தில் உருவாவது எது ?
விடை : எத்தனால்
8. மேகங்களை தூண்டி செயற்கையாக மழை பெய்ய செய்யும் வேதிப்பொருள்
விடை : பொட்டாசியம் அயோடைடு
9. உமிழ்நீர் சுரப்பியில் மிகப் பெரியது
விடை : மேலண்ணச் சுரப்பி
10. கருப்பையின் உட்சுவர் பகுதியில் காணப்படுவது
விடை : எண்டோமெட்ரியம்