NEET தேர்வு அறிவியல் மிக முக்கிய வினா விடைகள்
ஒரு வெற்றி ஒரு தோல்வியை மறக்க செய்யும்… ஒரு தோல்வி பல வெற்றிகளை செய்யும்.. முயற்சித்துப் பார் முடியாதது என்பது எதுவும் இல்லை.
நீட் தேர்விற்கு தயாராகும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் எங்கள் சிலேட்டு குச்சி சார்பாக உங்களுக்கு உதவும் வகையில் ஒரு சிறிய முயற்சி .வினாக்களை படித்து பயன் பெறுவீர்
வினா விடைகள்
1. பல்லுயிர் தன்மை என்ற சொல் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு எது?
விடை : 1985
2.IUCN கூற்று படி எத்தனை சிற்றினங்கள் இந்தியாவில் அழிவின் விளிம்பில் உள்ளது?
விடை : 172
3.Nomos மற்றும் Taxis என்ற கிரேக்கச் சொற்களின் பொருள் என்ன?
விடை : Nomos – சட்டம், Taxis – வரிசைப்படுத்துதல்
4. உயர் வெப்ப நிலையை தாங்க கூடிய பாக்டீரியா?
விடை : தெர்மல் அக்வாடிக்ஸ்
5. வகைப்பாட்டின் அடிப்படை அலகு சிற்றினம் என வகைப்படுத்தியவர் யார்?
விடை : ஜான் ரே
6. Species Plantarum என்ற நூலின் ஆசிரியர் யார்?
விடை : கரோலஸ் லின்னேயஸ்
7. காற்றின் மூலம் விதைகள் பரவும் முறை
விடை : அனிமோகோரி
8. தானியங்கி முறையில் விதைகள் பரவும் முறை
விடை : ஆட்டோகோரி
9. ஆப்பிள் மற்றும் அத்தி போன்ற பகுதிகளில் உண்ணக்கூடிய பொருளாகக் கருதப்படுவது
விடை : பூத்தளம்
10. விலங்குகளின் மூலம் விதைகள் பரவும் முறை
விடை : சூகோரி