நீட் தேர்வு முடியட்டும் ஒன் டு ஒன் நான் தயார் அண்ணாமலை !
நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. நீட் த்தேர்வு குறித்து அசச்த்தால் தமிழ்நாட்டில் மூன்று இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்டனர். ஒரே நாளில் நடந்த இந்த தற்கொலை சம்பவத்தை அடுத்து நீட்தேர்வு எதற்கு என்று அரசியல் கட்சிகள் கேள்விகளுக்கு மத்திய அரசை குறை கூறி பேசினார்கள். இதற்கு பதிலளிக்கும் விதமாக பிஜேபி மாநில துணை தலைவர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திரு. அண்ணாமலை அவர்கள் ஊடகங்களுக்கு தெளிவாக பதிலளித்திருந்தார்.
அவருடைய ஒவ்வொரு சொல்லும் மரியாதையும் பொறுப்புணர்வும் மிகுந்து காணப்பட்டது. பிஜேபியில் இப்படியொரு மனிதரா என்று நினைக்கும் அளவிற்கு டவுன் டு எர்த் என்பார்கள் அந்த அளவிற்கு இறங்கி வந்து பேசினார். ஊடகத்தினர் என்றாலே சாதாரணமாகத்தான் பிரபலங்கள் நடத்துவார்கள் ஆனால் ஊடகத்தினர் ஒவ்வொரு கேள்விக்கும் திரு.அண்ணாமலை அவர்கள் நிதானமாக அண்ணா சொல்லுங்க, அண்ணா இதுக்கு இதுதான் என்றும், வார்த்தைக்கு வார்த்தை நல்ல மரியாதையுடன் விடை கொடுத்தார்.
நீட் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்படுகின்றது. தற்போது தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. ஆதலால் தேவையற்ற பேச்சுகளை நிறுத்திக் கொள்வோம். தேர்தல் முடியட்டும் இன்னும் மூன்று நாட்களில் நான் உங்களிடம் பேசத் தயாராக இருக்கின்றேன். எதிர்க்கட்சியினருக்கு பதிலளிக்க தயாராக இருக்கின்றேன். இதை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்.
தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் முடிவு தவறானது அதற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் நாடு முழுவதும் ஒரு தேர்வுமூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு படிக்க அனுமதிக்கப்படும்போது மாணவர்களின் திறன் செம்மையாகும் வலுவாகும் அவர்களுக்கு முறையான பயிற்சியினை வழங்கி அவர்களைத் தேர்வு எழுதச் செய்ய அனுமதிக்கலாம்.
முறையான கல்வி முறை இருந்தாலே போதும் புதிய கல்விக் கொள்கையில் கார்ப்பரேட் முறை இல்லை என திருவண்ணாமலை வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தான் விவாதத்திற்கு தயாராக இருக்கும்போது செந்தில் அவர்களே அதற்குத் தயாராக இல்லை என்றும் தான் இன்னும் அவருக்கு நேரம் கொடுத்திருப்பதாகவும் நேரம் இருந்தால் தன்னுடன் விவாதம் செய்ய வரட்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
பணிவு அடக்கத்துடன் அவருடைய பேச்சு இருந்தது ஒரு படித்த இளைஞர் அதைவிட பகுப்பாய்வு செய்யத் தெரிந்த இளைஞர் மரியாதை தெரிந்த இளைஞர், பிஜேபி யில் இருப்பது அந்த கட்சிக்கு மாபெரும் பலம் என்பது தெளிவாகின்றது.
பொறுமையின் சிகரமாக இருக்கின்றார் வார்த்தைகளை வடிகட்டிப் பேசுகின்றார். தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் அட்டகாசத்திற்கு இவர் முற்றுப்புள்ளி வைப்பார் என்று பலர் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். இதுவரை மொழி அரசியல் பேசிப் பிழைப்பு நடத்திவந்த திராவிட கட்சிகளுக்கு அண்ணாமலை போன்றவர்கள் தலையில் விழும் இடியாக இருப்பார்கள் என்று ஒரு சில அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
எது எப்படியோ நாட்டு மக்கள் நல்வழியில் நடத்தப்பட்டு அவர்களுக்கான தேவைகள் முறையாக நிறைவேற்றப்படுவது நல்ல அரசுக்கு ஒரு முகவரியாக அமையும்