NEET தேர்வுக்கான இயற்பியல் முக்கிய வினா விடைகள்
நாம் அனைவருக்கும் ஒரே மாதிரியான திறமைகள் இல்லாமல் இருக்கலாம் ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரியான வாய்ப்புகள் உள்ளது..
. – அப்துல் கலாம்
அப்துல் கலாம் கூறியது போல வாய்ப்புகள் அனைவருக்கும் கண்டிப்பாக இருக்கும். “காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்ற பழமொழிக்கு இணங்க, அனைவரும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சரியான முறையில் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம்…
வினா விடைகள்
1.பருப்பொருள்களின் நான்காவது நிலை விடை
விடை : பிளாஸ்மா
2.நெம்புகோலைத் தாங்கும் புள்ளி
விடை : ஆதாரப்புள்ளி
3.எந்திரங்களில் மிகவும் எளிமையானது
விடை : நெம்புகோல்
4.ஒரு பொருள் மீது ஒரு விசை செயல்பட்டு அப்பொருளை நகர்த்தினால் அச்செயல் என்ன?
விடை : வேலை
5.இரட்டைச் சாய்தள அமைப்பைக் கொண்டது
விடை : ஆப்பு
6.கம்பளித்துணியில் தேய்க்கப்பட்ட சீப்பு காகிதத்துகளை ஈர்ப்பது
விடை : மின்னூட்ட விசை
7.பாரமனியில் திரவமாகப் பயன்படுவது எது?
விடை : பாதரசம்
8.விண்வெளி ஆய்வு நிலையங்களில் மின்சாரம் தயாரிக்க உதவுவது
விடை : சூரிய மின்கலம் (சோலார்)
9.தாவரங்களில் ஒளிச் சேர்க்கையின் போது சேமிக்கப்படும் ஆற்றல்
விடை : வேதி ஆற்றல்