NEET தேர்விற்கான வேதியியல் முக்கிய வினா விடைகள்
உறுதியான நபர்களுக்கு தோல்வி என்பது இறுதிவரை இல்லை.
அவர்களின் அகராதியில் தோல்வி என்பது வெற்றிக்கான வழியில் கற்றுக்கொள்ள வேண்டிய அனுபவ பாடங்கள் தான்..

முக்கிய வினா விடைகள்
1.நீரேறிய காப்பர் சல்பேட்டின் நிறம் என்ன?
விடை : நீலம்
2.எத்தில் ஆல்கஹாலின் கொதிநிலை
விடை : 78o C
3.கோதுமையிலிருந்து உமியை நீக்கும் முறை
விடை : தூற்றுதல்
4.நீரும் மணலும் கலந்த கலவையைப் பிரிக்கும் முறை
விடை : தெளியவைத்து இறுத்தல்
5.ஹைட்ரோகுளோரிக் அமிலம் எக்காரத்துடன் வினைபுரிந்து சோடியம் குளோரைடை உருவாக்குகிறது
விடை : சோடியம் ஹைட்ராக்சைடு
6.நைட்ரஜனும் ஹைட்ரஜனும் இணைந்து அம்மோனியா உருவாதல் வினையின் பயன்படும் நியதி
விடை : உயர் வெப்பநிலை
7.கடல் நீரைக் குடி நீராக மாற்ற மேற்கொள்ளப்படும் செயல்முறை
விடை : காய்ச்சிவடித்தல்
8.மயில் துத்தம் என்பதன் வேதிப்பெயர்
விடை : காப்பர் சல்பேட்
9.ரவையில் கலந்துள்ள இரும்புத்தூளைப் பிரித்தெடுக்கும் முறை
விடை : காந்தப்பிரிப்பு முறை
10.துரு என்பதன் வேதிப் பெயர் என்ன ?
விடை : இரும்பு ஆக்ஸைடு