NEET தேர்விற்கான தாவரவியல் முக்கிய வினா விடைகள்
வானத்தைப் பாருங்கள் நாம் தனித்து இல்லை இந்த பிரபஞ்சம் முழுவதும் நம்மிடம் நட்பாக உள்ளது. கனவு காண்பவர்களுக்கு உழைப்பவர்களுக்கு மட்டுமே சிறந்தவற்றை வழங்குகின்றது
. – அப்துல் கலாம்
தாவரவியல் வினா விடைகள்
பாம்புக் கடிக்கு விஷ முறிவு மருந்து தயாரிக்கப்படும் தாவரம்
விடை : ராவுல்ஃபியா சர்பன்டைனா (சர்ப்பகாந்தி)
2.ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை : டாக்டர். சாமுவேல் ஹென்மென்
3.1909ல் வார்மிங் என்பவர் நீர்த் தேவையின் அடிப்படையில் தாவரங்களை எத்தனை வகைகளாகப் பிரித்துள்ளார்
விடை : மூன்று
4.கிரைசோகிராப் கருவியைக் கண்டுபிடித்த இந்திய அறிவியலறிஞர்
விடை : ஜே.சி. போஸ்
5.மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை மூச்சு விடுகிறான்
விடை : 16 முதல் 18 முறை
6.ஒடு தண்டு தாவரத்திற்கு எடுத்துக்காட்டு
விடை : புல்
7.மனித உடலில் மிகவும் கனமான உறுப்பு
விடை : தோல்
8.வேம்பிலிருந்து கிடைக்கும் பூச்சிக் கொல்லியின் பெயர்
விடை : அஸாடிராக்டின்
9.ஆன்டிஜென்கள் இல்லாத இரத்தத் தொகுதி
விடை : O இரத்தத் தொகுதி
10.எரிசக்தி ஆற்றலைத் தயாரிக்க உதவும் தாவரங்கள்
விடை : ஜட்ரோபா மற்றும் யூபோர்பியா
11.முட்டைத் தாவரம் என அழைக்கப்படுவது
விடை : கத்தரி