NEET தேர்வு தாவரவியல் மிக முக்கிய வினா விடைகள்
அது” ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கின்றது” என்று கவலையுடன் சிந்திப்பதை விடுத்து ,”அது என்னவோ எனக்கு கற்றுத் தர முயல்கின்றது “இன்று மனப்பாங்குடன் சோதனையான தருணங்களை கையாண்டால் சாதனைகள் படைக்கலாம்….
நீட் தேர்வு மாணவர்களுக்காக ஒரு சில முக்கிய வினாக்களை பார்ப்போம்
வினா விடைகள்
1. உட்கருவை பாதுகாப்பது
விடை : சைட்டோபிளாசம்
2. செல் என்ற வார்த்தை எந்த சொல்லிலிருந்து பெறப்பட்டது
விடை : செல்லுலா
3. தெளிவற்ற உட்கருவை கொண்ட செல் எது?
விடை : புரோகேரியாட்டிக் செல்
4. செல் கண்டறியப்பட்ட ஆண்டு ?
விடை : 1665
5. டிக்டியோசோம்கள் என்பது
விடை : தாவர செல்லின் கோல்கை உறுப்புகள்
6. பாக்டீரியா மற்றும் நீல பசும் பாசிகள் எதற்கு எடுத்துக்காட்டு
விடை : ஒரு செல் உயிரிகள்
7. செல்லின் உள்ளே நுழையும் நுண் கிருமிகளை அழிப்பது எது?
விடை : லைசோசோம்கள்
8. உணவை ஆற்றலாக மாற்றுவது
விடை : மைட்டோகாண்ட்ரியா
9. சென்ட்ரோசோம் எதற்கு பயன்படுகிறது?
விடை : புதிய செல்களை உருவாக்க
10. செல் கொள்கையை உருவாக்கியவர்கள் யார்?
விடை : ஜேக்கப் ஸ்லீடன் , தியோடர் ஸ்வான்