NEET தேர்வு உயிரியல் முக்கிய வினா விடைகள்
முடிந்துபோன விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள், வருங்காலம் எதைத் தந்தாலும் ஏற்றுக் கொள்ள தயாராக இருங்கள். ஏனென்றால் நமக்கு நன்கு தெரியும் நடந்ததை மாற்ற முடியாது, நடக்க இருப்பதை தடுக்கவும் முடியாது. ஆனால் நன்மையும் தீமையும் என்பது நம் முயற்சி மற்றும் கடின உழைப்பை பொறுத்தே அமைகிறது. எனவே சரியான முயற்சியும் கடின உழைப்பும் வெற்றியைத் தேடித் தரும்.
NEET தேர்விற்கு தயாராகும் அனைத்து மாணவர்களுக்கும் உதவும் வகையில் சிலேட்டு குச்சியின் ஒரு சிறிய முயற்சி.,
உயிரியல் வினா விடைகள்
1. பாக்டீரியாவைக் கண்டறிந்தவர் யார்?
விடை : ஆண்டன் வான் லூவன் ஹூக்
2. காக்கஸ் என்பது
விடை : உருளை வடிவ பாக்டீரியா
3. சர்க்கரை கரைசல் ஆல்கஹால் ஆக மாற்றமடைந்து எதனை வெளிவிடுகிறது?
விடை : கார்பன் டை ஆக்சைடு
4. விருந்தோம்பலின் அடிப்படையில் வைரஸ் எத்தனை வகைப்படும்?
விடை : 5
5. பேக்டீரியா முதன் முதலில் கண்டறியப்பட்ட ஆண்டு எது?
விடை : 1675
6. ஒரு மைக்ரான் என்பது?
விடை : 1/1000 மில்லி மீட்டர்
7. வைரஸ் என்ற வார்த்தை எந்த மொழியில் இருந்து உருவானது?
விடை : லத்தின்
8. கால் புள்ளி வடிவ பாக்டீரியா?
விடை : விப்ரியோ
9. ஒரு செல்லால் ஆன பச்சை நிற பாசி?
விடை : கிளாமிடோமோனஸ்
10. பிளாஸ்மோடியம் பால்சிபோரம் என்ற நுண்ணுயிரியால் பரவும் நோய் எது?
விடை: மலேரியா