நீட் மசோதா…சட்டபேரவையில் அனல் பறந்த விவாதம்..
நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார். இதனையடுத்து அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்களிடையே காரசார விவாதம் நடைபெற்றது.
கொள்கை அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டத்தை உயரிய கண்ணோட்டத்தொடு பார்க்காமல், குறை கூறுவது சரியல்ல; உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் திருப்பி அனுப்புகிறேன் என்பது ஏற்கத்தக்கது அல்ல!”
நீட் விலக்கு மசோதாவை தாக்கல் செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியுள்ளார். மேலும், ஆளுநரின் கருத்து, உயர்மட்டக் குழுவை அவமானப்படுத்துவது போல் உள்ளதகவும் அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து “தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ஆளுநர் திருப்பி அனுப்பிய வரலாறு இல்லை; நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு ஆளுநர் கூறிய காரணங்கள் ஏற்கத்தக்கதல்ல!” என பாமக உறுப்பினர் வெங்கடேஸ்வரன் கருத்து தெரிவித்துள்ளார்.
பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், நீட் பொருத்தவரையில் நாம் அனைவரும் ஒரே உணர்வில் தான் இருக்கிறோம்.. என தெரிவித்தார்.
“நீட் விலக்கை பொறுத்தவரை திமுக அரசு எடுக்கும் அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கும் அதிமுக முழு ஒத்துழைப்பு வழங்கும்!” என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதனையடுத்து பேசிய செல்வப்பெருந்தகை தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஹை வோல்டேஜ் முதலமைச்சர். அவரை நீங்கள் நெருங்கவே முடியாது என்றார்.
அதிமுக ஆட்சியில் திருப்பி அனுப்பிய நீட் விலக்கு மசோதா குறித்து ஒரு ஆண்டு வெளியில் கூறாதது ஏன்?” – சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
நீட் தேர்வு வேண்டாம் என்பதல்ல, நுழைவுத் தேர்வே கூடாது என்பதுதான் தமிழக மக்களின் நிலைபாடு” ஆளுநருக்கு கடும் கண்டம் தெரிவித்து பேரவையில், விசிக எம்.எல்.ஏ பாலாஜி பேசியுள்ளார்.
இந்த மசோதவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது பேசிய துரைமுருகன், நீங்கள் வெளியே சென்றாலும் மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாகவே கருதப்படும் என்றார்.