நீட் விவகாரம்..ஆளுநருக்கு எதிராக திமுக காய் நகர்த்தல்
நீட் தேர்வுக்கு எதிரான சட்ட வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக, பாஜகவை தவிர மற்ற அனைத்து கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டதில் பேசிய முதல்வர் ஸ்டாலின்; 2007ல் நுழைவுத் தேர்வு வேண்டாம் என்ற தமிழக சட்ட முன் வடிவுக்கு 84 நாட்களுக்குள் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். ஆனால், தற்போதைய நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் 142 நாட்கள் கிடப்பில் போட்டு அரசியலமைப்பு கடமையை மீறியுள்ளார் என காட்டமாக பேசினார். மேலும் நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி சட்ட முன் வடிவை முதல்வர் உள்ளிட்ட அனைத்துக் கட்சி தலைவர்கள் ஆளுநரிடம் நேரடியாக சென்று அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற டெல்லி சென்று போராட வேண்டும் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
நீட்ட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கும் தீர்மானத்துக்கு அனைத்துக்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.