இயற்கை அழகை பராமரிக்க கற்றாழை நீம் ஹெர்பல் சோப்!
ஹெர்பல் சோப்கள் பயன்படுத்தி இயற்கை அழகை பேணி காக்க உதவும் கற்றாழை நீம் ஹெர்பல் சோப் வீட்டிலேயே செய்து தற்சார்ப்பு வாழ்க்கையினை வாழலாம்.
சந்தைகளில் அதிக அளவில் பயன்படுத்தும் கெமிக்கல்கள் கலந்த அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதை தவிர்ப்பதால் பக்க விளைவுகள் தவிர்க்கப்பட்டு ஸ்கின்னின் தன்மை மாறாமல் இருக்கும்.
கற்றாழை, நீம் ஹெர்பல் சோப் செய்ய தேவையான பொருட்கள்:
தேவையான பொருட்கள் கிழே கொடுத்துள்ளோம் அதனை வைத்து வீட்டிலேயே சோப் தயாரித்து உங்கள் அழகு மற்றும் ஆரோக்கியத்தை பாது காத்து கொள்ளலாம்.
எலுமிச்சை அரை மூடிவேப்பிலை 3 கொத்துகற்றாழை ஒரு மடல்சோப் பேஸ் 100 கிராம்
எலுமிச்சையில் இயற்கையான குளோ எனப்படும் பளப்பளப்பு தன்மை தரும் பீளிச் உள்ளது மேலும் சருமத்தில் வெய்யிலினால் படும் கருமையை நீக்குகின்றது. சருமம் பொலிவு பெற்று இருக்கவும் மங்குகளை போக்கி அழகுறச் செய்கின்றது.
வேப்பிலையில் நோய் எதிர்ப்புகள் கொண்ட ஆற்றல் உள்ளது. காலங்காலமாக மருத்துவம் மற்றும் அழகுப் பொருளாகவும், உடலின் அகம் மற்றும் புறத்தை ஆரோக்கியம் மற்றும் அழகாக வைக்கின்றது. ஸ்கின்னின் டோனாராகவும், மாசிலிருந்து காத்து சிறந்த கண்டிசனராகவும், சொறி சிறங்கு தோல் நோய்கள் வராமல் தடுக்கின்றது.
கற்றாழை கண்ணியவள் சருமத்தை இளமையாக வைக்கவும் சிறந்த பிரைமர் மற்றும் சிசி கிரிம்களுக்கு நிகராக செயலாற்றுக்கின்றது. இயற்கையான பூஞ்சை எதிர்ப்பு பொருள் கொண்டது. வெய்யிலிருந்து காத்து சச்ஸ்கிரின் சன் ஸ்கிசரின் லோசனாக செயல்படும்.
செய்முறை:
கற்றாழை மடலிலுள்ள தோலை சீவி அரை மூடி எலுமிச்சையை தோலோடு சேர்த்து அத்துடன் வேப்பிலையை ஒன்றாக மிக்சியிலிட்டு நன்கு அரைத்து கொள்ள வேண்டும் கொரகொரப்பு தன்மையாக அரைத்தாலே போதுமானது ஆகும்.
கடாயினை அடுப்பில் வைத்து நீர் ஊற்றி அதன் மேல் கிண்ணத்த்தில் சோப் பேஸினை டபுள் பாயில் முறை மூலம் உருக்கி அதனுடன் அரைத்து வைத்ததிருந்த கற்றாழை மடல், எலுமிச்சை, வேப்பிலை கலவையை ஒன்றாக சேர்க்கவும் பின் அந்த கலவையை நன்றாக கலந்து சேர்த்து சோப் மோல்ட்டில் ஊற்றி இரண்டு மணி நேரம் காய வைக்கலம.
சோப் பேஸ் ஆன்லைனில் அதிகம் கிடைக்கின்றன. கிளிசரின் சோப் பேஸில் தேங்காய் எண்ணெய் மற்றும் லையு உள்ளது. சோப் பேஸ் கிடைக்கவில்லையெனில் பியர்ஸ் போன்ற கண்ணாடி சோப்பினை சிறிது சிறிதாக வெட்டி கிளிசரின் சோப் பேஸாக பயன்படுத்தலாம்.
இரண்டு மணிநேரம் கழித்துப் பார்த்தால் அது கொட்டி பட்டிருக்கும் ஆனால் அதனை இரண்டு நாட்கள் கழித்துதான் பயன்படுத்த வேண்டும் அப்பொழுது பயன்பாட்டிற்கு உகந்தாக இருக்கும்.