சருமப் பாதுகாப்பிற்கு வேப்பிலை சோப்
சருமப் பாதுகாப்பிற்கு வேப்பிலை சோப் பயன்படுத்துங்க. எந்த பருவ நிலையிலும் வேப்பிலை ஏற்றதாக இருக்கும். வேப்பிலை கிருமி நாசினி. எந்த கால நிலையிலும் இதை தாராளமாக உபயோகப்படுத்தலாம். எளிமையாக கிடைக்கக் கூடிய வேப்பிலையை வீட்டிலேயே சோப்பு செய்து வைத்து பயன்படுத்தலாம்.
முகத்தில் கரும்புள்ளி, முகப்பரு, வியர்குரு, பூச்சிக்கடி தொந்தரவுகள் இவற்றிலிருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. வேப்பிலை செயற்கையான முறையில் விற்கப்படுகின்ற கிரீம் வகைகளை முகப்பரு விற்காக பலரும் தடவி வருகின்றனர். எண்ணற்ற பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.
முகத்தில் இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேப்பிலை சோப் தயாரித்து முழுமையாக பயன்படுத்தி முழு பயனை பெற முடியும்.
வேப்பிலை சோப்
தேவையான பொருட்கள் : தேங்காய் எண்ணெய் 50 மில்லி, வேப்பிலை பவுடர் இரண்டு ஸ்பூன், வேப்பெண்ணை 10 மில்லி, காஸ்டிக் லை 10 மில்லி, சோப் மோட் தேவையான வடிவில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
செய்முறை விளக்கம் : 50 மில்லி அளவில் எடுத்து வைத்துள்ள தேங்காய் எண்ணையை, பத்து மில்லி அளவு வேப்பிலை எண்ணையை கலந்து நன்றாக அடித்து வைத்துக் கொள்ளவும்.
இதனுடன் வேப்பிலை பவுடரை சேர்த்து நன்றாக அடிக்க வேண்டும். கட்டி சேராமல் பார்த்து கலக்க வேண்டும். காஸ்டிக் லே தயார் செய்வதற்கு 5 மில்லி காஸ்டிக் சோடா எடுத்து, 10 மில்லி தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் வைத்து கட்டி இல்லாதவாறு நன்றாக மிக்ஸ் செய்து விடவும்.
காஸ்டிகும், தண்ணீரும் சேரும் போது சிறிது சூடாக்கி ஆவி வரும். எனவே கைபடாமல், நுகராமல் சேஃப்டி ஆக கலக்க வேண்டும். நன்றாக கலந்து ஆற வைத்து இதனுடன் இந்த கலவையுடன் தேங்காய் எண்ணெய், வேப்பிலை சேர்த்த கலவையையும் ஊற்றிக் கொள்ளவும்.
இப்பொழுது எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கி நன்றாக கலக்க வேண்டும். ஊற்றிய பிறகு கெட்டியான நிலைக்கு வரும் வரை நன்றாக இதனை கலந்து கொள்ளவும். இந்த கலவையை சோப் மோல்டில் ஊற்ற வேண்டும்.
சோப் மோல்டில் ஊற்றிய பிறகு சோப் ரெடி ஆவதற்கு 12 மணி நேரம் எடுத்துக் கொள்ளும். நன்றாக செட் ஆன பிறகு அதை மோல்டில் இருந்து எடுத்துக் கொண்டு தனியாக வைத்து ஒரு மாதம் கழித்து உபயோகப்படுத்தலாம்.
இந்த சோப்பை இரண்டு வருடங்களுக்கு வைத்து உபயோகப்படுத்தலாம். முதல் தடவை செய்யும் போது அளவு கம்மியாக செய்து பழகிய பிறகு இதே அளவை அதிகப்படுத்திக் கொள்ளலாம். காஸ்டிக் கெமிக்கல் கடைகளில் கிடைக்கிறது. இதை செய்து பார்த்து உங்கள் கமெண்டை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.