ஆரோக்கியம்சமையல் குறிப்புமருத்துவம்வாழ்க்கை முறை

வேப்பம் பூ சமையல் ஸ்பெசல்..!!

வேப்பம்பூ உடலுக்கு நல்ல ஜீரண சக்தியை கொடுப்பதுடன். உடல் கொழுப்பை குறைக்கவும். வயிற்றிலுள்ள பூச்சிகளை அழிக்கவும். வேப்பம்பூ உதவுகிறது. வேப்பம்பூ ரசம் வைத்து கொடுக்கலாம். இதனால் அதன் சத்து ரசத்தில் இறங்குவதுடன், உடன் புளிப்பு சுவை உள்ளதால் குழந்தைகளும் விரும்பி உண்ணுவர்.

வேப்பம் பூ ரசம்

3 ஸ்பூன் வேப்பம்பூ காய்ந்தது, தக்காளி-2 நறுக்கி வைக்கவும், பூண்டு 5 பல் தோலுரித்து தட்டி வைக்கவும். கறிவேப்பிலை 2, பெருங்காயத் தூள் கால் ஸ்பூன், புளித்தண்ணீர் எலுமிச்சை அளவு புளியை நீரில் கரைத்து எடுத்து வைக்கவும்.

தாளிக்க : கடுகு, சீரகம், தலா கால் ஸ்பூன். காய்ந்த மிளகாய் இரண்டு, மஞ்சள் தூள் கால் ஸ்பூன், நெய் ஒரு ஸ்பூன், உப்பு தேவையான அளவு.

செய்முறை : பாத்திரத்தில் புளித் தண்ணீரை கசடு நீக்கி வடித்து எடுத்து வைக்கவும். உப்பு, பெருங்காயத் தூள், தட்டிய பூண்டு, மஞ்சள் தூள், பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து, நன்கு கொதிக்க விடவும். ஒரு கடாயில் நெய் விட்டு கடுகு, சீரகம், தாளித்து பின் கறிவேப்பிலை சேர்த்து, காய்ந்த மிளகாய், கிள்ளிப் போட்டு, வேப்பம் பூ சேர்த்து, நன்கு வறுத்து கொதிக்கும் ரசத்தில் சேர்த்து, அடுப்பை அணைத்து விடவும். சுவையான வேப்பம் பூ ரசம் தயார்.

வேப்பம் பூ துவையல் :

கால் கப் காய்ந்த வேப்பம் பூ எடுத்து வைக்கவும். 3 ஸ்பூன் கருப்பு எள் அல்லது வெள்ளை எள். உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு தலா ஒரு ஸ்பூன். தேங்காய் துருவல் அரை மூடி, காய்ந்த மிளகாய் 7, கறிவேப்பிலை 2, புளி சிறிய நெல்லிக் காய் அளவு, எண்ணெய், உப்பு தேவைக்கு ஏற்ப.

செய்முறை : வாணலியில் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும். பிறகு அதே வாணலியில், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, தாளித்து வேப்பம் பூவை வறுத்துக் கொள்ளவும். மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து, அரைத்து கடைசியில் வேப்பம் பூ சேர்த்து ஒருமுறை அரைத்து எடுக்கவும். சுவைக்கு ஏற்ப உப்பு, மிளகாய் சேர்த்துக் கொள்ளலாம். சுவையான வேப்பம் பூ துவையல் தயார். துவையல் பித்தத்தை நீக்கி பசியைத் தூண்டும் என்பதால், இதை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *