வீட்டருகே உள்ள மருத்துவத்தை.!நீங்கள் அறிந்தீரோ?
இயற்கையில் உன்னதமாக விளங்கும் மரங்களில், மனிதனுக்கு எல்லாவிதத்திலும் பயனளிக்கின்றன. பல மருத்துவ குணங்களை அள்ளி வீசுகின்றன. அப்படி அள்ளித்தரும் வேப்பிலையின் மகத்துவத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
மருத்துவ குணங்களை அள்ளி வீசும்
வேப்பிலையை நன்கு அரைத்து, சிறிது எலுமிச்சை சாறு, கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவ, எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு சிறந்த ஃபேஸ் பேக்காக செயல்படும். வேப்பிலை பவுடருடன் ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முகத்திற்கு தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரால் கழுவ பருக்கள் குறையும். இறந்த செல்கள் நீங்குவதோடு சருமத்தில் எண்ணெய் பிசுக்கு போகும்.
பருக்கள், தழும்புகளை நீக்கவும் பயன்படுத்தலாம். ஒரு பவுலில் ஒரு தேக்கரண்டி கடலை மாவு மற்றும் தயிர் சேர்த்து கலந்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இதை கலந்து முகத்தில் தடவி நன்றாக ஊற வைத்துக் கொள்ளுங்கள். இதனால் சருமம் மென்மையாகவும் மாறும். வேப்பிலை பொடியுடன் பால் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்திற்கு தடவி வருவதால், பளபளப்பாகவும் இருக்கும்.
இதனுடன் சிறிது எலுமிச்சைச் சாறையும் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு பௌலில் வேப்பிலை பொடி, துளசி பொடி, சிறிது தேன் சேர்த்து நன்றாக கலக்கி சருமத்தில் தடவி ஊற வைத்து குளித்தால் சருமத்தில் ஏற்படும் பருக்களை தடுக்கும். நீரில் வேப்பிலையை போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து, இலையை எடுத்து அரைத்து முகத்தில் 10 நிமிடம் ஊறவைத்து, குளிர்ந்த நீரால் கழுவுங்கள்.
இதனால் முகம் பொலிவோடு காணப்படுவதுடன், முகத்தில் உள்ள சிவப்பு நிறம், அரிப்பு மற்றும் தழும்புகளையும் இது குணப்படுத்தும். லோஷன் மற்றும் சாம்பலில் வேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. ஆன்டி-பாக்டீரியல் சருமத்தில் ஏற்படும். பழுப்பு நிற தோல் போன்றவற்றை சரி செய்கிறது. வேப்பிலை ஒரு கிருமி நாசினியாகவும், முக்கியமாக ஆயுர்வேத மருத்துவங்களில் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருவதால், பல்வேறு நோய்கள் மற்றும் கூந்தல் பிரச்சனைகளுக்கு நல்லதொரு தீர்வாக இருக்கிறது.
இலை பல்வேறு மருத்துவ குணங்களை பெற்றது
சூடான நீரில் சிறிது வேப்பிலையைப் போட்டு குளித்தனர். ஏனெனில் ரத்தத்தை சுத்தப்படுத்தும். இயற்கைப் பொருளாக இது பயன்பட்டது. மரத்தின் ஒவ்வொரு பாகமும், மறைமுகமாக அழைப்பு விடுக்கிறது. ஆன்மிகத்தை பொதுமக்களிடையே தெய்வம் குடி கொள்ளும் இடமாகவும் கருதப்படுவதால், இதனுடைய இலை பல்வேறு மருத்துவ குணங்களை பெற்றுள்ளது.
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்ற வாக்குக்கு இணங்க, அளப்பறிய பயன்களை மனித இனத்திற்கு இயற்கை சிறப்புமிக்க மரங்களின் வகைகளில் வேம்பு மரம் தனித்துவமாக விளங்குகிறது. கோவில்களில் வேப்பமரங்கள் இருப்பதும், கோவிலுக்கு செல்வோர் இதன் இலைகளை பறித்து கொள்வதும் இருந்து வருகின்றது. சாப்பிட கசப்பாக இருந்தாலும், ஏராளமான மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
மரத்தின் ஒவ்வொரு பகுதியும் பயன்படுத்தவும், மறைமுகமாக அழைப்பு விடுக்கிறது. வேப்பிலை ஒரு கிருமிநாசினி என்றாலும் முக்கியமாக ஆயுர்வேத மருத்துவங்களில் அதிக அளவு பயன்படுத்தப்படுவதால் பல்வேறு சரும நோய்கள் மற்றும் கூந்தல் பிரச்சனைகளுக்கு நல்லதொரு தீர்வாக விளங்குகிறது.