அக்டோபர் 17 முதல் 26 வரை நவராத்திரி
அக்டோபர் 17 முதல் 26 வரை நவராத்திரி ஒன்பது நாட்களும் தினமும் ஒவ்வொரு வகையான பிரசாதங்களை படைத்து வழிபட வேண்டும். நவ கிரகங்களுக்கு உரிய ஏழு வகையான தானியங்களை சமைத்து படைக்கலாம்.
- ஏழு நாட்களுக்கு உரிய கலரில் சாதங்களை செய்து படைக்கலாம்.
- நவ கிரகங்களுக்கு உரிய ஏழு வகையான தானியங்களை சமைத்து படைக்கலாம்.
- அவரவர்களின் வேலை சூழல் ஏற்றவாறு தினமும் முடிந்தவரை உங்களால் முடிந்த பிரசாதங்களை படைத்து வழிபடலாம்.
நவராத்திரி வெரைட்டியாக படைத்து வழிபடுங்க வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், மசாலா சுண்டல், அவல் பாயாசம், பால் பாயாசம், பாசிப்பருப்பு பாயாசம், கல்கண்டு பொங்கல், கதம்ப சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம், கடலை மாவில் செய்த லட்டு, கல்கண்டு பிரசாதங்களையும், பழவகைகளையும் படைத்து வழிபடலாம். தினமும் இதில் உங்களுக்கு எவ்வளவு முடியுமோ உங்கள் சக்திக்கு ஏற்ப வெரைட்டியாக செய்து படைக்கலாம்.
நவராத்திரி ஏழு நாட்களுக்கு உரிய
ஏழு நாட்களுக்கு உரிய கலரில் சாதங்களை செய்து படைக்கலாம். உதாரணமாக திங்கட்கிழமை சந்திர பகவானுக்கு உரிய வெள்ளை நிறம் என்றால் தயிர் சாதம், பால் பாயாசம், அவல் பாயாசம்.
செவ்வாய்க்கிழமை செவ்வாய் பகவானுக்கு உகந்த பருப்பு சுண்டல் அல்லது அரிசிம்பருப்பு.
புதன் கிழமையில் பச்சை நிறம் புதன் பகவானுக்கு உரிய நிறம் என்பதால் பச்சைப்பயிறு சுண்டல் அல்லது புதினா சட்னி சாதத்துடன் சேர்த்து கிளறிய சாதம் செய்யலாம்.
வியாழன் கிழமை குரு பகவானுக்கு உரிய மஞ்சள் நிறத்தில் சமைக்கலாம். எலுமிச்சை சாதம், சுண்டல், பொங்கல் செய்யலாம். வெள்ளிக்கிழமை சுக்கிர பகவானுக்கு உரிய வெள்ளை நிறம் மஞ்சள் நிறத்தில் செய்யலாம். எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், வெள்ளை மொச்சை செய்யலாம்.
சனிக்கிழமை எள் சாதம் புளியோதரை, கருப்பு சுண்டல் படைக்கலாம். ஞாயிற்றுக்கிழமை கேது பகவானுக்குரிய உளுந்து சாதம் படைத்து வழிபடலாம். நவராத்திரி ஒன்பது நாட்களும் அம்பாளுக்குரிய பிரசாதங்கள் உடன் நவகிரகங்களின் நிறங்களைக் ஏற்ற பயறு வகைகளையும் செய்து வழிபட கூடுதல் சிறப்பு. அவரவர்களின் வேலை சூழல் ஏற்றவாறு தினமும் முடிந்தவரை உங்களால் முடிந்த பிரசாதங்களை படைத்து வழிபட்டு அம்பாளின் ஆசியை பெறுவோமாக!..