Navaraathri last day: விஜயதசமி 2023 கொலு வைத்திருப்பவர்கள் கடைசி நாள் என்ன செய்தால் அம்மனின் பரிபூரண அருள் கிடைக்கும்??
நவராத்திரி 9 நாட்களும் அம்மன் ஒவ்வொரு அவதாரத்தில் அவதரித்து மகிஷாசுரன் என்னும் அரக்கனுடன் போரிட்டு பத்தாவது நாள் விஜயதசமியான இன்று மகிஷாசுரனை வதம் செய்து வெற்றி நாளாக கொண்டாடிய நாளை விஜயதசமி நாளாக கொண்டாடப்படுகிறது.
விஜயதசமி 2023
நாம் அனைவரும் வெற்றியை ஒருபோதும் வேண்டாம் என்று சொல்வதில்லை வெற்றிக்காக தான் அனைவரும் ஒரு செயலை போட்டி போட்டுக் கொண்டு போராடுகின்றனர். அப்படிப்பட்ட வெற்றியை கொண்டாடும் வெற்றி நாளே விஜயதசமி நாளாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் நாம் தொடங்கும் அனைத்து செயல்களும் நிச்சயம் வெற்றி பெறும் என்பது ஐதீகம். எனவே நவராத்திரியின் 9 நாட்கள் அம்மனை வழிபட முடியாதவர்கள் விஜயதசமி தனமான இன்று அம்மனை வணங்கினால் நமக்கு அணைத்து வெற்றிகளையும் அம்மன் அள்ளித் தருவாள். எனவே இன்றைய தினம் அனைவரும் அம்மனை நினைத்து வழிபட்டு வணங்கினால் தேவியின் முழு அருளை பெறலாம்.
கொலு உள்ளவர்கள் விஜயதசமி 2023 எப்படி வழிபடுவது??
ஒன்பது நாட்கள் வீட்டில் கொலு வைத்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு ஒவ்வொரு அலங்காரம் செய்து நெய்வேத்தியம் படைத்து வழிபட்டு வந்தவர்கள் பத்தாம் நாளான இன்று வாசனைப் பூக்கள் கொண்டு அம்மனை வழிபட வேண்டும். கொலு கலசம் வைத்திருப்பவர்கள் அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு அம்மனுக்கு ஏதாவது ஒரு இனிப்பு வைத்து ஆரத்தி எடுத்து வழிபட வேண்டும். அம்மனை வழிபட்ட பின்பு கலசத்தில் உள்ள நீரை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும் . கலசத்தில் அரிசி வைத்திருந்தால் அந்த அரிசியை சமைத்து உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பரிமாறி உண்ண வேண்டும். நீங்கள் சாப்பிடுவது மட்டுமல்லாமல் பிறருக்கும் இந்த உணவை கொடுப்பது உங்களுக்கு நல்ல பலனை தேடித் தரும்.
விஜயதசமி 2023 நாளில் அம்மனுக்கு படைக்க வேண்டிய நெய்வேத்தியம்
நவராத்திரி ஒன்பது நாளும் அம்மனுக்கு ஒவ்வொரு விதமான நெய்வேத்தியம் படைத்து வணங்கி வந்திருப்போம். நவராத்திரியின் கடைசி நாளான விஜயதசமி தினத்தன்று அம்மனுக்கு என்ன நெய்வேத்தியம் படைப்பது, என்ன செய்வது என்பவர்களுக்காக. விஜயதசமி தினத்தன்று தினத்தன்று பால், பாயாசம் , சுண்டல், பழம் , இனிப்பு வகை ஏதாவது வைத்து அம்மனை வழிபட வேண்டும். இவ்வாறு வழிபடுவதால் நான் நினைத்த அனைத்து காரியங்களும் வெற்றியில் முடியும். உங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க விரும்புவோர் இன்றைய தினத்தில் சேர்ப்பது மிக மிக நல்லது.
அம்மனிடம் என்ன வேண்டினால் நன்மை
நவராத்திரி ஒன்பது நாட்கள் அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை நெய்வேத்தியம் படைத்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு ஒவ்வொரு அலங்காரம் செய்து செய்து அன்றைய நாளுக்குரிய கோலம் போட்டு, ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு பிடித்த பழம் வைத்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ரூபத்தில் அவதரிக்கும் தேவிக்கு ஏற்ற ராகம் பாடி மந்திரம் கூறி வழிபட்டு வந்த பெண்கள் நவராத்திரியின் கடைசி தினமான விஜயதசமி அன்று அம்மனை மனதார நினைத்து வழிபட்டு
அம்மா இந்த ஒன்பது நாட்களும் உன்னை வணங்குவதற்கு எந்த தடையும் இன்றி எங்களுக்கு வரம் அளித்தமைக்கு மனதார நன்றி கூறுகிறேன். இதை போல் ஒவ்வொரு வருடமும் நாங்கள் கொலு வைத்து நவராத்திரியின் 10 நாட்களும் உன்னை வழிபட , நீங்கள் எங்கள் வீட்டில் 10 நாட்கள் நேரடியாக வந்து வரம் தர எந்த தடையும் இன்றி நாங்கள் கொலு வைத்து விழாவை கொண்டாட அருள் புரிய வேண்டும்.
என்று அம்மனிடம் வேண்டினால் நீங்கள் 9 நாட்கள் கொலு வைத்ததன் முழு பலனையும் நீங்கள் அடைவீர்கள். உங்கள் வீட்டில் அம்மன் குடியேறி உங்களின் கவலைகள் நீங்கி எந்த செயலை தொடங்கினாலும் அது வெற்றியில் முடியும். வீட்டில் செல்வம் பெருகி மன மகிழ்வுடன் குடும்பத்தில் உள்ள அனைவரும் இருப்பீர்கள்.